ரூ.400 கோடி வளர்ச்சிப் பணிகள் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு
29 Oct 2026, 11:44 pm
<p><strong>ரூ.400 கோடி வளர்ச்சிப் பணிகள் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு</strong></p><p>சிதம்பரம், அக்.29-சிதம்பரம் நகராட்சி, அண்ணாமலைநகர் பேரூராட்சி மற்றும் பரங்கிப்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் ரூ.400கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யாசெந்தில்குமார் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.சிதம்பரம் லால்புரத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம், தில்லை காளியம்மன் ஓடை புறவழிச்சாலை, சிவகாமசுந்தரி ஓடை தூர்வாரும் பணி, வெங்கான் தெரு சாலைப் பணி, காந்தி சிலை ரவுண்டானா அழகுபடுத்தும் திட்டம்உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர், அவற்றைத் தரமாகவும், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள்ளும் முடிக்கஅலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>மேலும், பாதாளச் சாக்கடை வளாகத்தில் 2.5 ஏக்கரில் 6,000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளுடன் அமைக்கப் பட்டுள்ள மியாவாக்கி அடர் வனம், குடிநீர் விநியோகம், பசுமை நுண் உரம் தயாரிப்பு மையம் மற்றும் தெருநாய்கள்கருத்தடை சிகிச்சை மையம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார். கடந்த 10 மாதங்களில் 1,132 தெருநாய்களுக்குக் கருத்தடைஅறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகத் தெரி வித்தார்.தொடர்ந்து, அண்ணா மலைநகர் பேரூராட்சியில் அம்ருத், ஜல் ஜீவன் மிஷன் திட்டங்களின் கீழ் நடைபெறும் குடிநீர்ப்பணிகளையும், பரங்கிப்பேட்டை ஒன்றியம் சி.கொத்தங்குடியில் ரூ.99.70 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் புதிய நூலகக் கட்டடப்பணிகளையும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது நகராட்சி பொறியாளர் எஸ்.சுரேஷ்,பொதுப்பணி மேற்பார்வை யாளர் ரம்யா உள்ளிட்ட அலு வலர்கள் உடனிருந்தனர்.</p>
