பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது
4 Nov 2026, 12:36 am

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது

சிதம்பரம், நவ.3-சிதம்பரம் மேலவீதி கஞ்சி தொட்டி முனையில் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிதம்பரம் வட்டம் மீதிகுடி கிராமத்தைச் சேர்ந்த சிவகாமி (32) என்ற பெண்ணை அவரது கணவர் கொலை செய்ததுடன், அவரது உடலை யாருக்கும் தெரியாமல் இரவு நேரத்தில் அப்பகுதியில் உள்ள சுடு காட்டில் எரித்த சம்பவத்தைக் கண்டித்தும், புவனகிரி வட்டம் தீத்தம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ரம்யா (27) என்ற பெண் வரதட்சணைக் கொடுமையால் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய அவரது கணவர் மற்றும் மாமியார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

மாதர் சங்க சிதம்பரம் நகரச் செயலாளர் அமுதா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் மாநிலத் தலைவர் பிரமிளா கலந்து கொண்டு பேசுகையில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராகத் தொடர்ந்து நடைபெற்று வரும் பல்வேறு குற்றச் சம்பவங்களைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குற்றவாளிகள் மீது காவல்துறை பாரபட்ச மின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மல்லிகா, மாவட்டத் தலைவர் மாதவி, மாவட்டத் துணைத் தலைவர் தேன்மொழி, மாவட்ட நிர்வாகி அம்சயாள் ஆகியோர் பேசினர்.

இதில் மாதர் சங்க நிர்வாகிகள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு மீதிகுடி கிராமத்தில் சிவ காமி கொலை செய்யப்பட்டதையும், தீத்தம்பாளையத்தில் ரம்யா உயிரிழந்த சம்பவத்தையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.