நகராட்சி அலுவலகத்தில் சோதனைகணக்கில் வராத பணம் பறிமுதல்
55 minutes before

நகராட்சி அலுவலகத்தில் சோதனைகணக்கில் வராத பணம் பறிமுதல்

திருவண்ணாமலை, செப்.23-திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, திருவத்திபுரம் நகராட்சி அலுவலகத்தில் செவ்வாயன்று 8 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சோதனை செய்தனர்.

நகராட்சியில் பணிபுரியும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களையும் அவர்களுடைய வங்கி பரிவர்த்தனைகளையும் ஆய்வு செய்ததில் நகராட்சி ஆணையரின் உதவியாளர் வங்கிக் கணக்கில், கணக்கில் வராத கூகுள் பே மூலம் சுமார் ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் இருப்பதை கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து கணக்கில் வராத பணத்தினை பறிமுதல் செய்தனர். நள்ளிரவு 12 மணிவரை நடந்த சோதனையில், முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.