முந்தய பக்கம்

ய்யாறு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட அறை திறப்பு!

8 Jul 2026, 1:37 am
ய்யாறு அரசு மகளிர்  மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட அறை திறப்பு!
<p><strong>செய்யாறு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட அறை திறப்பு! </strong></p><p>திருவண்ணாமலை, ஜூலை 7- திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில், நாட்டு நலப்பணித் திட்ட அலகிற்கான தனி அறையைத் தலைமையாசிரியர் கே. சுமதி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், நாட்டு நலப்பணித் திட்டத்தில் இணைந்துள்ள 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் 50 மாணவிகளுக்கு அடையாள அட்டை களைத் தலைமையாசிரியர் வழங்கினார். மாணவிகள் சமூக நலப்பணிகளில் ஆர்வமுடனும், திறம்படவும் செயலாற்ற வேண்டும் என அவர் வாழ்த்தினார். இதில் உதவித் தலைமையாசிரியர்கள் கே. சாந்தி, அ. மாலா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எம். இரவிகுமார், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் இ. லதா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram