தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சாகுபடி நெல்லை விரைவாக கொள்முதல் செய்து உடனடியாக பணம் வழங்க வேண்டும் செய்யாறில் விவசாயிகள் சங்கம் கோரிக்கை

21 May 2026, 1:31 am
சாகுபடி நெல்லை விரைவாக கொள்முதல்  செய்து உடனடியாக பணம் வழங்க வேண்டும் செய்யாறில் விவசாயிகள் சங்கம் கோரிக்கை

சாகுபடி நெல்லை விரைவாக கொள்முதல் செய்து உடனடியாக பணம் வழங்க வேண்டும் செய்யாறில் விவசாயிகள் சங்கம் கோரிக்கை

திருவண்ணாமலை, மே 29- திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவில் தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் மூலம் 7 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு மூலம் 23 கொள்முதல் மையங்களும் செயல்பட்டு வருகின்றன.

இதில் தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் மையங்களைத் தனியார் கூட்டமைப்பு நிர்வகித்து வருகிறது.

செய்யாறு தாலுகாவில் தற்போது கரீப் பருவத்தில் பயிரிடப்பட்ட சாகுபடி நெல் மூட்டைகளில் 50 சதவீதத்திற்கும் மேல் இந்த மையங்கள் மூலம் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனால் மீதமுள்ள நெல் மூட்டைகளை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மற்றும் தனியார் மண்டிகளில் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய சூழல் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

இதில் சிவில் சப்ளை கார்ப்பரேஷன் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான பணம் ஒரு வாரத்திற்குள் விவசாயிகளுக்குக் கிடைத்து விடுகிறது.

ஆனால், தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான பணம் இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

மேலும், சிவில் சப்ளை கார்ப்பரேஷன் மையங்களில் நெல் கொள்முதல் செய்யப் பெருமளவு விவசாயிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதோடு, பதிவு செய்து பல நாட்கள் காத்துக்கிடக்கும் சூழலும் உள்ளது.

இங்கு வாய்ப்பு கிடைக்காத விவசாயிகள் தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு மையங்களை நாடும்போது, அங்குள்ள தொழிலாளர்களிடம் கையூட்டு, வேண்டியவர்களுக்கு முன்னுரிமை, அடியாட்களின் மிரட்டல், எடை மோசடி, நெல் விரயம் எனப் பல வழிகளில் துன்பத்திற்கு ஆளாகின்றனர்.

இதனால் மனமுடையும் விவசாயிகள், தங்களோடு இந்த விவசாயத் தொழில் முடியட்டும் என்றும், தங்களின் வாரிசுகள் இத்தகைய இன்னல்களை அனுபவிக்காமல் வேறு தொழிலுக்கு மாற வேண்டும் என்றும் வேதனையுடன் கூறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் செய்யாறு தாலுகா தலைவர் எம்.தாமோதரன், செயலாளர் எஸ்.ஜெயகுமார், பொருளாளர் ராஜேந்தரன் ஆகியோர் கூறுகையில், சிவில் சப்ளை நிர்வாகம் விவசாயிகளிடம் இருந்து விரைவாக நெல்லை கொள்முதல் செய்து, உடனடியாக பணப் பட்டுவாடா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கும் நெல் மூட்டைகள் மழை மற்றும் வெயிலால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கப் பாதுகாப்பு கிடங்குகள் அமைக்க வேண்டும் என்றும், நெல் கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுத்து விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்திட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.