செய்யாறு அமரராஜா தொழிற்சாலையில் தீவிரமடையும் தொழிலாளர் போராட்டம்
5 Oct 2026, 1:02 am
<p><strong>செய்யாறு அமரராஜா தொழிற்சாலையில் தீவிரமடையும் தொழிலாளர் போராட்டம்</strong></p><p>திருவண்ணாமலை அக் 4-திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள பேட்டரி மறுசுழற்சி நிறுவனமான ‘அமரராஜா சர்குலர் சொல்யூஷன்ஸ்’ தொழிற்சாலையில் தொழிலாளர்களின் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம்சனிக்கிழமையன்று 4 ஆவதுநாளாக நீடித்தது. சிஐடியு தொழிற்சங்கத்தின் கீழ் அணிதிரண்டுள்ள தொழிலாளர்கள், தங்களின் ஜனநாயக உரிமைகளை வலியுறுத்தி ஆலை தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் அத்துமீறல்களைக் கண்டித்தும், தொழிலாளர் உரிமைகளை நிலைநாட்டக் கோரியும் செப்டம்பர் 30 முதல்தொழிலாளர்கள் ஒட்டுமொத்தமாகப் பணிகளைப் புறக்கணித்துத் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர்.</p><p>இந்நிலையில், இந்த போராட்டத்திற்குச் செய்யாறு சிப்காட் வளாகத்தில் உள்ள லெதர், காலணி மற்றும் மின்னணு உதிரிபாகத் தயாரிப்பு நிறுவனங்களின் சி.ஐ.டி.யுகிளைச் சங்கங்கள் தங்களின் முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளன. கோரிக்கைகள் உடனடியாகநிறைவேற்றப்படாவிட்டால் செய்யாறு தொழிற்பேட்டை முழுவதையும் ஸ்தம்பிக்க வைக்கும் கூட்டு போராட்டம்வெடிக்கும் எனவும் சிஐடியு நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p>
