தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து செய்யாறு அமரராஜா பேட்டரி நிறுவனத்தில் வேலை நிறுத்தம்

1 Oct 2026, 1:11 am
தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து செய்யாறு அமரராஜா பேட்டரி நிறுவனத்தில் வேலை நிறுத்தம்

தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து செய்யாறு அமரராஜா பேட்டரி நிறுவனத்தில் வேலை நிறுத்தம்

திருவண்ணாமலை, செப்.30-திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட்டில் செயல்பட்டு வரும் “அமரராஜா சர்குலர் சொல்யூஷன்” பேட்டரி மறுசுழற்சி நிறுவனத்தின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் சிப்காட் தொழிற்பேட்டையில், அமரராஜா குழுமத்தின் பேட்டரி மறுசுழற்சி ஆலை, செயல்பட்டு வருகிறது. பயன்படுத்தப்பட்ட லீட்-ஆசிட் பேட்டரிகளில் இருந்து ஈயத்தை மீட்டு, அதை மீண்டும் புதிய பேட்டரிகள் தயாரிப்பில் பயன்படுத்தும் வகையில் இந்த ஆலை உருவாக்கப்பட்டுள்ளது.

பயன்படுத்தப்பட்ட லீட்-ஆசிட் பேட்டரிகள் முறையாக கையாளப்படா விட்டால் ஈயம் உள்ளிட்ட அபாயகரமான பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படக்கூடும். எனவே, இதுபோன்ற பெரிய அளவிலான பேட்டரி மறுசுழற்சி தொழிற்சாலையில் காற்று மாசு கட்டுப்பாடு, நீர் பயன்பாடு, அபாயகரமான கழிவு மேலாண்மை, தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் தொடர்ச்சியான சுற்றுச்சூழல் கண்காணிப்பு ஆகியவை குறித்து தொடர் கண்காணிப்பு அவசியம் எனவும் செய்யாறு பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், அமரராஜா நிறுவனத்தின் அதிகாரிகள் பயன்படுத்துவதைப் போல தரமான பாதுகாப்பு உபகரணங்கள், ரசாயனங்களை நேரடியாக கையாளும் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்

இந்நிலையில் தொழிலாளர் விரோத போக்கை கடைபிடிக்கும் அமராஜா நிறுவனத்தின் செயல்பாட்டை கண்டித்து, புதன் அன்று (செப்.30) தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கி உள்ளனர்.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தில், சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் இ. முத்துக்குமார், மாவட்ட நிர்வாகிகள் வே.சங்கர், வெங்கடேசன், பூபாலன் உள்ளிட்டோர் பேசினர்.

அமராஜா நிறுவனம், தொழி

லாளர்கள் சங்கம் வைக்கும் உரிமையை மறுக்கக்கூடாது. அபாயகரமான பணியிடத்தில் தொழி லாளர்களை ஈடுபடுத்தக்கூடாது. பழி வாங்கல் நடவடிக்கைகளை கைவிட வேண்டும், தொழிலாளர்களை அச்சுறுத்தி போட்டி தொழிற்சங்கத்தை உருவாக்க கூடாது. தொழிற்சங்கம் அமைப்பது குறித்தான நடவடிக்கைகளில் நிறுவனத்தின் புகாரை வைத்து, தொழிலாளர்களை அச்சுறுத்தும் தூசி காவல் நிலையம் தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். சட்ட விரோத தொழிற்சாலை உற்பத்தி முறைக்கு எதிராக தொழிற்சாலை துறை நடவடிக்கை எடுத்திட வேண்டும். அமரராஜா நிர்வாகமும் தமிழக அரசின் தொழிலாளர் துறையும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தொழிலாளர்கள் கோரிக்கைகள் குறித்து சிஐடியு செயலாளர் இ. முத்துக்குமார் உரையாற்றினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.