செட்டிகுப்பம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் அவதி
15 Jul 2026, 11:30 pm
<p><strong>செட்டிகுப்பம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் அவதி</strong></p><p>வேலூர், ஜூலை 15 – வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செட்டி குப்பம் ஊராட்சியில், சுமார் 5,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலை யில், அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, மேல் செட்டிகுப்பம், சின்ன செட்டிகுப்பம், கீழ் செட்டிகுப்பம், போடிநாயக்கன்பாளையம், சாமுண் டிபுரம், கோவிந்தன் கொட்டாய், உள்ளி கூட்ரோடு மற்றும் கிருஷ்ணசாமி நகர் உள்ளிட்ட 10 உட்கிராமங்களை இணைக்கும் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. கீழ் செட்டிகுப்பம் முதல் சின்ன செட்டிகுப்பம் வழியாக கோவிந்தா புரம் கூட்டுச்சாலை வரையிலும், பரவக்கல் சாலை முதல் காக்கா தோப்பு சாலை வரையிலும், வாணியம் பாடியான்பட்டி கூட்ரோடு முதல் மேல் செட்டிகுப்பம் மற்றும் பரவக்கல் சாலை வரையிலான பாதைகள் மற்றும் வாணியம்பாடியான்பட்டி சுடு காட்டு சாலை ஆகியவை கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாகக் காணப்படுகின்றன. இதனால், தினமும் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் தொழிலா ளர்கள் என ஆயிரக்கணக்கானோர் விபத்துகளில் சிக்கி காயமடையும் அபாயகரமான சூழல் நிலவுகிறது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடமும், தாலுகா ஜமாபந்தியிலும் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், சின்ன செட்டிகுப்பம், மேல் செட்டிகுப்பம் மற்றும் சாமுண்டிபுரம் பகுதிகளில் முறையான வடிகால் வசதி இல்லாததால், கழிவுநீர் சாலைகளி லேயே வழிந்தோடுகிறது. இதனால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதேபோல், சின்ன செட்டிகுப்பத்தில் போதுமான சுடு காட்டு வசதி இல்லாததுடன், ஆக்கிர மிப்புகளும் அதிகரித்துள்ளன. அதே சமயம், வாணியம்பாடியான்பட்டி சுடு காட்டுப் பகுதியில் அண்டை ஊராட்சி யின் குப்பைகள் கொட்டப்படுவதால், அருகிலுள்ள நெல்லூர்பேட்டை ஏரி யின் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஒருங்கிணைந்த மகளிர் மற்றும் குழந்தைகள் சுகாதார வளா கம், தண்ணீர் வசதியின்றி புதர் மண்டி பயன்பாடற்றுப் போயுள்ளது. சின்ன செட்டிகுப்பத்தில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைக்க அனுமதி வழங்கப்பட்டும், அதிகாரிகளின் மெத்தனத்தால் அது இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை. இந்த அவல நிலைகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குடியாத்தம் தெற்கு தாலுகா செயலா ளர் சி. சரவணன் கூறுகையில், ஊராட்சி யில் உள்ள சாலைகளை உடனடியாகச் சீரமைத்து தரமான சிமெண்ட் சாலை களாக மாற்ற வேண்டும் என்றும், முறையான கழிவுநீர் கால்வாய்களை அமைக்க வேண்டும் என்றும் வலியுறு த்தினார். மேலும், மகளிர் சுகாதார வளாகத்தைச் சீரமைத்து பயன்பாட் டிற்கு கொண்டு வருவதுடன், சுடு காட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரி பகுதியில் குப்பை கொட்டுவதைத் தடுத்து நிறுத்தி நிலத்தடி நீரைப் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள் ளார். - ஜி.ஞானவேல்</p>
