தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னப்பட்டினம் யாருக்கானது? பளபளக்கும் மாநகரத்தின் இருண்ட பக்கங்கள்

17 May 2026, 8:53 pm
சென்னப்பட்டினம் யாருக்கானது?  பளபளக்கும் மாநகரத்தின் இருண்ட பக்கங்கள்

சென்னப்பட்டினம் யாருக்கானது? பளபளக்கும் மாநகரத்தின் இருண்ட பக்கங்கள்

“நகரமயமாக்கல் என்பது சிலரை வாழவைத்து பலரை வெளியேற்றுவதாக இருக்கக் கூடாது” என்ற மிக முக்கியமான முழக்கத்தை முன்வைத்து, சென்னை மாநகரத்தின் பரிணாம வளர்ச்சி மற்றும் விளிம்புநிலை மக்க ளின் வாழ்வாதாரப் பின்னணியைப் பேசுகிறது ராமச்சந்திர வைத்தியநாத் எழுதிய ‘சென்னப்பட்டினம் யாருக்கானது?’ என்னும் நூல்.

பூர்வகுடிகளின் வெளியேற்றமும் வர்க்க அரசியலும்

சென்னை இன்று அடைந்துள்ள பிரம்மாண்டமான வளர்ச்சிக்கு பின்னால் உழைக்கும் மக்க ளின் கண்ணீரும் வலியும் மறைந்து ள்ளன. கூவம் மற்றும் அடையாறு ஆற்றங்கரைகளில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த பூர்வகுடி மக்களை, ‘நகரச் சுத்தம்’ என்ற போர்வையில் நகரின் எல்லை களுக்கு அப்பால் (கண்ணகி நகர், பெரும்பாக்கம் போன்ற பகுதி களுக்கு) துரத்தியடித்ததன் பின்னணி யில் உள்ள அரசியலை வரலாற்று தரவுகளுடன் ஆசிரியர் அம்பலப் படுத்துகிறார். சென்னையின் நிலப்பரப்பு உலகளாவிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவும், மேல்தட்டு மக்களுக்காகவும் எவ்வாறு திட்ட மிட்டு மாற்றியமைக்கப்படுகிறது என்பதை நூல் விளக்குகிறது.

வெள்ளப் பாதிப்பின் உண்மை முகம்

சென்னையில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளுக்குச் சேரி வாழ் எளிய மக்களே காரணம் என்ற பொதுப்புத்திப் பிரச்சா ரத்தை இந்நூல்சான்றுகளுடன் மறுக்கிறது. நீர்நிலைகளையும், சதுப்புநிலங்களையும் ஆக்கிர மித்துக் கட்டப்பட்ட மாபெரும் வணிகக் கட்டடங்களும், அடுக்கு மாடி குடியிருப்புகளுமே சென்னை யை மிதக்க விடுகின்றன என்ற உண்மையை உரக்கச் சொல்கிறது. ஒரு பக்கம் பளபளக்கும் ஐடி பூங்காக் களும், மறுபக்கம் அடிப்படை வசதி களற்ற மறுவாழ்வுக் குடியிருப்பு களும் நிலவுவது நகரின் தீவிரமான சமூக சமநிலையின்மையைக் காட்டுகிறது.

உழைக்கும் மக்களின் சென்னை

ஆங்கிலேயர் காலத்து மெட்ராஸ் முதல் இன்றைய ‘ஸ்மார்ட் சிட்டி’ சென்னை வரை, நகரத் திட்டமிடலில் காட்டப்படும் பாரபட்சங்களை நுணுக்கமாக அலசும் இந்நூல், வெறும் புள்ளிவிவரத் தொகுப்பாக இல்லாமல், நடைபாதைகளிலும் சேரிகளிலும் வாழும் மக்களின் குரலாக ஒலிக்கிறது. இடப்பெயர்வு மற்றும் வாழ்விட உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா அவர்களின் சிறப்பான முன்னுரையோடு, பாரதி புத்தகா லயம் வெளியிட்டுள்ள இந்நூல், “சென்னை மாநகரம் என்றென்றும் உழைக்கும் மக்களுக்கானது” என்ற உரிமையை நிலைநாட்டத் தேவையான வரலாற்றுத் தரவுகளை அள்ளிக் கொடுத்துள்ளது.

சென்னையை நேசிக்கும், அதன் உழைக்கும் வர்க்கத்தின் உரிமை களுக்காகக் குரல் கொடுக்கும் ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய, பிறருக்குப் பரிசளிக்க வேண்டிய காத்திரமான நூல் இது. சென்னப்பட்டினம் யாருக்கானது? ஆசிரியர்: ராமச்சந்திர வைத்தியநாத் வெளியீடு: பாரதி புத்தகாலயம் விலை: ₹40 தொடர்புக்கு: 9444567935

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.