தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை- இராமேஸ்வரம் ‘வந்தே பாரத்’ ரயில்! காரைக்குடி வழியாக இயக்கப்படுகிறது

19 Nov 2025, 3:33 pm
சென்னை- இராமேஸ்வரம் ‘வந்தே பாரத்’ ரயில்! காரைக்குடி வழியாக இயக்கப்படுகிறது
<p><strong>சென்னை- இராமேஸ்வரம் &lsquo;வந்தே பாரத்&rsquo; ரயில்! காரைக்குடி வழியாக இயக்கப்படுகிறது </strong></p> <p>சென்னை, நவ. 19 - இராமேஸ்வரத்தில் இருந்து மதுரை வழியாக, விரைவில் &nbsp;&lsquo;வந்தே பாரத்&rsquo; எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என்று அறி விக்கப்பட்டிருந்த நிலையில், இராமேஸ்வரம் - சென்னை &nbsp;&lsquo;வந்தே பாரத்&rsquo; ரயில், காரைக்குடி வழியாக இயக்கப்படுவ தாக தற்காலிக நேர அட்டவணை வெளியாகியுள்ளது. இந்த கால அட்டவணைப்படி, இராமேஸ்வரத்திலிருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், இராமநாத புரம், சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, விழுப்புரம், தாம்பரம் வழியாக இரவு 10.20 மணிக்கு சென்னை &nbsp;சென்றடைகிறது. இராமநாதபுரத்தில் மாலை 3.15 மணிக்கும், சிவகங்கை யில் மாலை 4.10 மணிக்கும், காரைக்குடியில் மாலை 4.40 மணிக்கும், புதுக்கோட்டையில் மாலை 5.10 மணிக்கும், திருச்சியில் மாலை 6.10 மணிக்கும், விழுப்புரத்தில் இரவு 8.15 &nbsp;மணிக்கும், தாம்பரத்தில் இரவு 9.40 மணிக்கும் புறப்படு கிறது. மறுமார்க்கத்தில், சென்னையிலிருந்து அதிகாலை 5.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், தாம்பரம், விழுப்புரம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, இராம நாதபுரம் வழியாக மதியம் 1.15 மணிக்கு இராமேஸ்வரம் சென்றடைகிறது. &nbsp;தாம்பரத்தில் அதிகாலை 5.52 மணிக்கும், விழுப்புரத்தில் காலை 7.20 மணிக்கும், திருச்சியில் காலை 9.20 மணிக்கும், &nbsp;புதுக்கோட்டை யில் காலை 10 மணிக்கும், காரைக்குடியில் காலை 10.40 மணிக்கும், சிவகங்கையில் நண்பகல் 11.15 மணிக்கும், இராமநாதபுரத்தில் மதியம் 12.15 மணிக்கும் புறப்படுகிறது. இந்த ரயில் புதன்கிழமை தவிர வாரத்தின் பிற நாட்களில் இயக்கப்படவுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.