ரூ. 20,000 கோடியில் சென்னை - திருச்சிக்கு புதிய பசுமைவழி விரைவுச் சாலை
3 Jul 2026, 9:10 pm
<p><strong>ரூ. 20,000 கோடியில் சென்னை - திருச்சிக்கு புதிய பசுமைவழி விரைவுச் சாலை</strong></p><p>நெடுஞ்சாலை ஆணையம் பணிகளைத் தொடங்கியது! </p><p>சென்னை, ஜூலை 3: சென்னையில் இருந்து திருச்சி ராப்பள்ளிக்கு வெறும் 3 மணி நேரத்தில் செல்லும் வகையில், 300 கிலோ மீட்டர் நீளமுள்ள புதிய பசுமைவழி விரைவுச்சாலைத் திட்டப் பணிகளை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தொடங்கியுள்ளது. ரூ. 20,000 கோடி மதிப்பீட்டிலான இத்திட்டம், சென்னை - பெங்களூரு விரைவுச்சாலைக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் இரண்டாவது தேசிய விரைவுச் சாலைத் திட்டமாகும். இதில் வாகனங்கள் அதிகபட்சமாக மணிக்கு 120 கி.மீ வேகத்தில் செல்ல அனுமதிக்கப்படும். நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய், இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்த நிலையில் இப்பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக தேசிய நெடுஞ் சாலை ஆணையத்தின் திட்ட இயக்கு நர் எம்.எஸ். சைதன்யா கூறுகையில், “மாநில அரசு நிறுவனங்களுடன் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதிகள் தொடர் பாக ஆரம்பக்கட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன. தற்போது 5 முதல் 6 மணி நேரம் ஆகும் பயணத்தை இத்திட்டம் பாதியாகக் குறைக்கும். இந்த விரைவுச்சாலை சென்னை சிங்கபெருமாள்கோவிலில் தொடங்கி 12 மாவட்டங்கள் வழியே 90 மீட்டர் அகலத்தில் அமையவுள்ளது. மாநில அரசு இதற்கு முழு ஒத்து ழைப்பு தருவதாக உறுதியளித்து உள்ளதுடன், ஓராண்டுக்குள் காகிதப் பணிகள் முடிக்கப்பட்டு காவிரி ஆற்றின் குறுக்கே புதிய பாலத்து டன் இச்சாலை அமைக்கப்படும்” என்றார்.</p>
