விடுப்பு மறுத்து சம்பள பிடித்தம் போக்குவரத்து தொழிலாளர்கள் பணிமனைகளில் ஆர்ப்பாட்டம்
16 Jun 2026, 1:01 am
<p><strong>விடுப்பு மறுத்து சம்பள பிடித்தம் போக்குவரத்து தொழிலாளர்கள் பணிமனைகளில் ஆர்ப்பாட்டம்</strong></p><p>சென்னை, ஜூன் 15– விடுப்பு மறுத்து சம்பளம் பிடித்தம் செய்வதை கண்டித்து திங்களன்று (ஜூன் 15) பணிமனைகளில் போக்குவரத்து தொழி லாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் 30 பணிகளில் இருந்து இயக்கப்படுகிறது. சுமார் 18 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இந்த தொழிலாளர்களுக்கு மாதத்தில் 4 நாட்கள் சம்ப ளத்துடன் கூடிய விடுமுறை உள்ளது. தொழிலாளர்கள் அனுமதிக்கப்பட்ட இந்த விடுப்பை எடுத்தாலும், நிர்வாகம் பணிக்கு வர வில்லை (ஆப்சென்ட்) என்று பதிவு செய்து சம்பள பிடித்தம் செய்கிறது. மேலும், ஊழியர் பற்றாக்குறையால் 230க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படாமல் (நாட்ரன்) உள்ளது. இதனால் பணிக்கு வரும் நடத்துநர் அல்லது ஓட்டுநருக்கு மாற்று வேலை வழங்காமல், பணி மறுக்கப்படுகிறது. மேலும், பணிக்கு வர வில்லை (ஆப்சென்ட்) என்று ஊதியம் பிடித்தம் செய்கின்றன்ர். இவற்றை கண்டித்தும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், நாட்ரன் செய்வதை நிறுத்த வேண்டும், பணிக்கு வந்த தொழிலாளிக்கு மாற்றுப் பணி அல்லது வருகைப் பதிவு வழங்க வேண்டும் என வலியுறுத்தி 30 பணி மனைகளிலும் அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் சார்பில் அதி காலை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது தாம்பரம் பணிமனை யில் சங்கத்தின் தலை வர் ஆர்.துரை, பெரம்பூர் பணிமனையில் பொதுச் செயலாளர் வி.தயானந்தம், அயனாவரம் பணிமனையில் பொருளாளர் ஏ.ஆர்.பாலாஜி, அய்யப்பன் தாங்கல் பணிமனையில் சம்மேளன பொருளாளர் சசிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
