வடக்கு போக்குவரத்து மாவட்டத்தில் ஒரே நாளில் 3,816 பேர் மீது வழக்குப்பதிவு
2 Nov 2026, 12:16 am

வடக்கு போக்குவரத்து மாவட்டத்தில் ஒரே நாளில் 3,816 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை, நவ. 1-சென்னையில் சாலை விபத்துகளை குறைக்கவும், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை முறையாகக் கடைப்பிடிப்பதை உறுதி செய்யவும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் சனிக்கிழமை (அக். 31) ‘ஜீரோ டாலரன்ஸ் டே’ எனப்படும் பூஜ்ஜியசகிப்புத்தன்மை நாள் சிறப்பு சோதனை நடைபெற்றது.

இந்தச் சிறப்பு சோதனையின்போது, தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவது, காரில் சீட் பெல்ட்அணியாமல் செல்வது, போக்குவரத்து சிக்னல்களை மீறுவது, அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது மற்றும் மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட பல்வேறுவிதிமீறல்களைக் கண்டறிந்து அபராதம் விதிக்கப்பட்டது.ராயபுரம் போக்குவரத்து காவல் நிலையம் அருகே நடைபெற்ற வாகனத் தணிக்கையின்போது, போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் சாமுண்டீஸ்வரி நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் குடும்பத்துடன் வந்தவர்களை தடுத்து நிறுத்தி, சாலை பாதுகாப்பின் அவசியம் குறித்துகூடுதல் ஆணையர் சாமுண்டீஸ்வரி அறிவுரை வழங்கினார். மேலும், விதிமீறலில் ஈடுபட்ட அவர்களுக்குஉடனடியாக அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டார்.

அதே நேரத்தில், போக்குவரத்து விதிகளை முறையாகக் கடைப்பிடித்து தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளைபாராட்டிய காவல் துறையினர் அவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.இந்த சோதனையின் முடிவில், சென்னைமட்டும் ஒரே நாளில் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 3,816 வாகன ஓட்டிகள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.சாலை விபத்துகளை தடுக்கவும், பொதுமக்களிடையே போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இதுபோன்ற சிறப்பு சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படும் என போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.