சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் மார்ச் 2027-க்குள் நிறைவடையும் என எதிர்பார்ப்பு சென்னை, ஜூன் 14-
15 Jun 2026, 12:50 am

சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் மார்ச் 2027-க்குள் நிறைவடையும் என எதிர்பார்ப்பு

சென்னை, ஜூன் 14-

சென்னை மற்றும் திருப்பதி நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 716-ஐ விரிவாக்கும் பணி, பல சவால்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டுவர, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தற்போது 2027 மார்ச் மாதம் வரை புதிய காலக்கெடு நிர்ணயித்துள்ளது.

தற்போது இத்திட்டத்தின் ஒட்டு மொத்தப் பணிகளில் சுமார் 40 சதவீதத்திற்கும் அதிகமானவை நிறைவடைந்துள்ளன. பல முக்கியப் பகுதிகளில் பிரதான சாலை அமைக்கப்பட்டு, வாகனப்

போக்குவரத்திற்குத் திறந்து விடப்பட்டுள்ளது. இருப்பினும், முழுமையான பயன்பாட்டிற்கு வர இன்னும் சில தடைகள் நீடிக்கின்றன. குறிப்பாக, சுமார் 600 மீட்டர் நீளமுள்ள சர்வீஸ் சாலைகளை அமைப்பதில் நிலம் கையகப்படுத்துதல் தொடர் பான சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பது பணிகளின் வேகத்தைக் குறைத்துள்ளது. இது தவிர, சாலையை ஒட்டியிருந்த சில கோயில்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டியிருந்தது. சில கோயில்களை இடித்து மீண்டும் கட்டித்தர வேண்டியிருந்தால் பணிகள் தாமதமானது. முன்னதாக, தார் விலை உயர்வால் ஒப்பந்ததா ரரின் பணி மந்தமாக இருந்த நிலையில், தற்போது அந்தச் சிக்கல்கள் சரிசெய்யப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தச் சாலை விரிவாக்கம் சாதாரணமான சாலைப் பணி மட்டு மல்ல, இது ஆயிரக்கணக்கான மக்களின் அன்றாடப் பயணத்தோடு தொடர்புடையது. பாடி முதல் திருநின்றவூர் மற்றும் காக்கலூர் வரை

யிலான பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவல கங்களுக்குச் செல்லும் ஆயிரக் கணக்கான மக்கள் இந்தச் சாலையையே பெரிதும் நம்பி

யுள்ளனர். இவர்களில் பெரும்பாலா னோர் இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள். பிரதான சாலை தற்போது அகலப்படுத்தப்பட்டு வழுவழுப்பான மேற்பரப்பைக் கொண்டுள்ளதால், வாகனங்கள் வேகமாகச் செல்வது விபத்துகளுக்கு வழிவகுப்பதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இ.எஸ்.எஸ். ராமன் கவலை தெரிவிக்கிறார். எனவே, சிறிய வாகனங்கள் பாதுகாப்பாகப் பயணிக்க சேவைச் சாலைகளை விரைவில் முடிக்க வேண்டியது அவசியமாகிறது.

சாலையைப் பயன்படுத்தும் பயணிகளின் அனுபவமும் கலவை யாகவே உள்ளது. திருநின்றவூர் வரையில் நான்கு வழிச்சாலை பணிகள் நிறைவடைந்திருந்தாலும், அதற்கு அடுத்தடுத்த பகுதிகளில் பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை. குறிப்பாக வேப்பம்பாட்டு அருகே சில இடங்களில் சாலைகள் இன்னும் சீரமைக்கப்படாமல், வெறும் கரடு முரடான மேற்பரப்பாகவே உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் தொடர்ந்து பாதைகளை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. மேலும், போதிய வழிகாட்டிப் பலகைகள் இல்லாதது புதிய பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

ஒட்டுமொத்தத்தில், இத்திட்டம் நிறைவடையும் போது சென்னை-திருப்பதி இடையேயான போக்கு வரத்து நெரிசல் குறைவதோடு, விபத்துகள் தவிர்க்கப்பட்டு பயணிகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவு கிறது. மார்ச் 2027-க்குள் இப்பணிகள் அனைத்தும் முழுமையாக முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.