தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயிலுக்கு சொந்தமான இடங்களில் வாழ்வோருக்கு நிபந்தனையின்றி பெயர் மாற்றம் செய்திடுக! கோயில் மனையில் குடியிருப்போர் ஆர்ப்

28 Oct 2026, 1:01 am
கோயிலுக்கு சொந்தமான இடங்களில் வாழ்வோருக்கு நிபந்தனையின்றி பெயர் மாற்றம் செய்திடுக! கோயில் மனையில் குடியிருப்போர் ஆர்ப்

கோயிலுக்கு சொந்தமான இடங்களில் வாழ்வோருக்கு நிபந்தனையின்றி பெயர் மாற்றம் செய்திடுக! கோயில் மனையில் குடியிருப்போர் ஆர்ப்பாட்டம்

சென்னை, அக். 27-கோயிலுக்கு சொந்தமான இடங்களில் வாழ்வோருக்கு எந்தவித நிபந்தனையின்றி பெயர் மாற்றம் செய்ய கோரி செவ்வாயன்று (அக். 27) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கோயில் சார்ந்த மற்றும் சாராத மனையில் குடியிருப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோயில் சார்ந்த மனையில் குடியிருப்போர், கடைகள் வைத்திருப்போருக்கு பகுதிமுறையை நடைமுறைப்படுத்தும் வரை அரசாணை 85 அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசியஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் “இந்த பிரச்சனையில் அமைச்சர்,முதலமைச்சர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்” என்றார்.தமிழ்நாடு கோயில் சார்ந்த மற்றும் சாராத மனையில் குடியிருப்போர் சங்க கூட்டமைப்பு தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து, தமிழ்நாடு அடிமனைபயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் வி.செல்வம் உள்ளிட்டோர் பேசினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.