முந்தய பக்கம்

துறைமுகங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டியில் சென்னை அணி வெற்றி!

7 Mar 2026, 2:36 pm
துறைமுகங்களுக்கு இடையேயான  விளையாட்டு போட்டியில் சென்னை அணி வெற்றி!
<p><strong>துறைமுகங்களுக்கு இடையேயான &nbsp;விளையாட்டு போட்டியில் சென்னை அணி வெற்றி</strong></p> <p>சென்னை, மார்ச் 7- இந்தியாவில் உள்ள முக்கிய துறைமுகங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டி சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் உள்ள முக்கிய 11 துறைமுகங்களை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். விளையாட்டு போட்டிகளை தமிழக சிப்காட் நிர்வாக இயக்குநர் டாக்டர் கே.செந்தில் ராஜ் தொடங்கி வைத்தார். பேஸ்கட்பால் போட்டியில் சென்னை துறைமுகம் அணியும், தூத்துக்குடி வஉசி துறைமுகம் அணியும் இறுதிச் சுற்றில் மோதின. இதில் சென்னை துறைமுகம் அணி வெற்றி பெற்றது. செஸ் போட்டியில் மர்மகோவா துறை முகம் அணியும், காமராஜர் துறைமுகம் அணியும் இறுதிச் சுற்றில் மோதின. இதில் மர்ம கோவா அணி வெற்றி பெற்றது. விளையாட்டில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சென்னை துறைமுக தலைவர் எஸ்.விஸ்வ நாதன், சென்னை மாநகராட்சி இணை ஆணையர் வி.பி.ஜெய சீலன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். &nbsp;இதில் காமராஜர் துறைமுக நிர்வாக இயக்குநர் ஜே.பி.ஐரீன் சிந்தியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram