முந்தய பக்கம்

மின்சார ரயில்களுக்கான புதிய கால அட்டவணை

30 Oct 2026, 11:31 pm
மின்சார ரயில்களுக்கான புதிய கால அட்டவணை

மின்சார ரயில்களுக்கான புதிய கால அட்டவணை

சென்னை, அக், 30சென்னை புறநகர் ரயில் பயணிகளின் வசதிக்காகவும், ரயில் சேவைகளின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும் புதிய கால அட்டவணையைத் தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய கால அட்டவணை வரும் நவம்பர் 1-ஆம்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் மின்சார ரயில்களுக்கான புதியகால அட்டவணை நவம்பர் 1-ஆம் தேதி முதலும், திங்கள் முதல் சனிக்கிழமைவரை இயக்கப்படும் வார நாட்களுக்கான ரயில் சேவைகளுக்கான அட்டவணை நவம்பர் 2-ஆம் தேதி (திங்கட்கிழமை) முதலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள இந்தப் புதிய கால அட்டவணையில், சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தட ரயில் சேவைகளில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, திருவள்ளூரில் இருந்து சென்னை மூர் மார்க்கெட் செல்லும்மின்சார ரயில்கள் மற்றும்

மூர் மார்க்கெட்டில் இருந்து திருவள்ளூர் செல்லும் மின்சார ரயில்களின் நேரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

பயணிகள் அனைவரும் இந்தமாற்றங்களைக் கவனத்தில் கொண்டு தங்களது பயணங்களைத் திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Share
FacebookXWhatsAppTelegram