தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருக்குறள் பேச்சுப்போட்டி சென்னை மாணவர்கள் இருவர் மாநில அளவில் வென்று சாதனை!

10 Oct 2026, 2:22 am
திருக்குறள் பேச்சுப்போட்டி சென்னை மாணவர்கள் இருவர்  மாநில அளவில் வென்று சாதனை!

திருக்குறள் பேச்சுப்போட்டி சென்னை மாணவர்கள் இருவர் மாநில அளவில் வென்று சாதனை!

சென்னை, அக்.9- தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக ஸ்ரீராம் இலக்கியக் கழகம்,நடத்திய திருக்குறள் பேச்சுப் போட்டி இறுதிச் சுற்றில் சென்னையைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் மாநில அளவில் பரிசுகளை வென்று சாதனை படைத்துள்ளனர்.

‘இடைநிலைப் பிரிவு (6-8 ஆம் வகுப்பு)’, ‘மேல்நிலைப் பிரிவு (9-12 வகுப்பு)’, ‘கல்லூரிப் பிரிவு’ என மூன்று பிரிவுகளில் திருக்குறள் பேச்சுப் போட்டியை 1988-ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் மாநில அளவில் நடத்தி வருகிறது. இதில் நடப்பாண்டில் மொத்தம் 5620 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியின் இடைநிலைப் பிரிவில் வானகரம், வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவன் க. ஹரிசரண் 2 ஆம் பரிசையும், மேல்நிலைப் பிரிவில் புதூர், அம்பத்துர், சேது பாஸ்கரா நிறைநிலை மேல்நிலைப் பள்ளி மாணவி ப. யாழினி 2ஆம் பரிசையும் வென்று சாதனை படைத்துள்ளனர்.

முதல் பரிசு வென்றோருக்கு தலா ரூ.15,000 ரொக்கமும், 2ஆம் பரிசை தட்டிச் சென்றோருக்கு தலா ரூ.10,000 ரொக்கமும், மூன்றாம் பரிசாக தலா ரூ.7,500 ரொக்கமும் மற்றும் அனைவருக்கும் கோப்பையும், சான்றிதழும் வழங்கப்பட்டன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.