தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நகர விற்பனைக்குழு கூட்டத்தை விதிகளின்படி உடனடியாகக் கூட்ட சாலையோர வியாபாரிகள் கோரிக்கை

3 hours before
நகர விற்பனைக்குழு கூட்டத்தை விதிகளின்படி  உடனடியாகக் கூட்ட சாலையோர வியாபாரிகள் கோரிக்கை

நகர விற்பனைக்குழு கூட்டத்தை விதிகளின்படி உடனடியாகக் கூட்ட சாலையோர வியாபாரிகள் கோரிக்கை

சென்னை, செப். 29-நகர விற்பனைக்குழு கூட்டத்தை விதிகளின்படி உடனடியாகக் கூட்ட வேண்டும் என சாலையோர வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை மண்டலம் 4க்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், அவர்களின் சட்டப்பூர்வ உரிமைகளை உறுதி செய்யவும் வலியுறுத்தி, சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையரிடம் சென்னை மாவட்ட சாலையோர சிறு கடை விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பில் விரிவான கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அதில், சாலையோர விற்பனையாளர்கள் சட்டம் 2014 மற்றும் தமிழ்நாடு விதிகள் 2015இன் அடிப்படையில் 21 முக்கியமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மீனாம்பாள் சாலை, எம்.கே.பி. நகர் (வெஸ்ட் அவென்யூ & சென்ட்ரல் அவென்யூ), வியாசர்பாடி மார்க்கெட், புதுவண்ணாரப்பேட்டை, மேயர் பாசுதேவ் தெரு, கண்ணப்பன் பிள்ளை தெரு, வெங்கட கிருஷ்ணா தெரு, சின்னத்தம்பி தெரு மற்றும் தண்டையார்பேட்டை காமராஜர் மருத்துவமனை பகுதி உள்ளிட்ட இடங்களில் உள்ள விற்பனை மண்டலங்களை முறையாக முறைப்படுத்தி, வியாபாரிகளுக்குத் தடையற்ற வியாபாரச் சூழலையும், அடையாள அட்டைகளையும் வழங்க வேண்டும்.

வணிக வளாகம்

பெரிய மார்க்கெட் பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய வணிக வளாகப் பணிகளை விரைந்து முடித்து, அங்கு ஏற்கனவே வியாபாரம் செய்து வந்த தகுதியுள்ள வியாபாரிகளுக்கு கடைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

விற்பனைக் குழு கூட்டம்

கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக கூட்டப்படாத நகர விற்பனைக்குழு கூட்டத்தை விதிகளின்படி உடனடியாகக் கூட்ட வேண்டும். மேலும், குழு உறுப்பினர்களுக்கான நிலுவைக் கூட்டப்படியை வழங்க நடவடிக்கை எடுப்பதுடன், மண்டலம் 4இல் குழுவின் செயல்பாட்டிற்குத் தனி அலுவலகம் ஒதுக்க வேண்டும்.

அடிப்படை வசதிகள்

வியாபாரிகளுக்குத் தேவையான தள்ளுவண்டிகள், குடிநீர், கழிப்பிட வசதி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வசதிகளை செய்து தர வேண்டும். மத்திய அரசின் வங்கி கடன் உதவி கிடைக்காத தகுதியான வியாபாரிகளுக்கு உடனடியாக கடன் உதவி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, இந்த அனைத்துக் கோரிக்கைகளின் மீது மாநகராட்சி நிர்வாகம் காலதாமதமின்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

மண்டல அலுவலர் ராஜ்குமார் சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதில் மாவட்டச் செயலாளர் டி.வெங்கட், நகர விற்பனை குழு உறுப்பினர்கள் ஜி.மோனிஷா, மீரான் மைதீன், சுகுமாரன், சீனிவாசன், எம்.கே.பி. நகர் சென்ட்ரல் அவென்யூ நிர்வாகிகள் அறிவழகன், ஜலால், வெஸ்ட் அவென்யூ நிர்வாகி ரஷீத், மீனம்மாள் சாலை சங்க நிர்வாகி சாமி முத்தரசன், தண்டையார்பேட்டை காலரா மருத்துவமனை சங்க நிர்வாகிகள் உமாபதி ,இஸ்மத் அலி, ஷாஜகான், வெங்கட கிருஷ்ணன் தெரு நிர்வாகிகள், பச்சையப்பன், கண்ணன், தமிழ் செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.