தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மழைநீர் வடிகால் பணிகளுக்கு தோண்டப்பட்ட பள்ளத்தை மூடுக சாலையோர விற்பனையாளர்கள் கோரிக்கை

5 Jun 2026, 4:10 am
மழைநீர் வடிகால் பணிகளுக்கு தோண்டப்பட்ட பள்ளத்தை மூடுக  சாலையோர விற்பனையாளர்கள் கோரிக்கை

மழைநீர் வடிகால் பணிகளுக்கு தோண்டப்பட்ட பள்ளத்தை மூடுக சாலையோர விற்பனையாளர்கள் கோரிக்கை

சென்னை, ஜூன் 4- மழைநீர் வடிகால் பணிகளுக்கு தோண்டப்பட்ட பள்ளத்தை மூட வேண்டும் என சாலையோர விற்பனையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சென்னை மாவட்ட சாலையோர சிறுகடை விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் மண்டல அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், 2023 ஆம் ஆண்டு வியாபாரிகளை ஆய்வு செய்து விற்பனை யாளர் அடையாள அட்டை மாநகராட்சி மூலம் வழங்கப்பட்டது. அதில் 310 வியா பாரிகள் விடுபட்டுள்ளனர். எனவே தாங்கள் அனைத்து வியா பாரிகளையும் முறையாக ஆய்வு செய்து அவர்களுக்கு விற்பனையாளர் அடையாள அட்டை வழங்க வேண்டும். அதேபோல் 4ஆவது மண்டலத்திற்கு உட்பட்ட 39ஆவது வட்டம் வண்ணாரப் பேட்டை மார்க்கெட் (விற்பனை மண்ட லம்) வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட வியா பாரிகள் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாமல் சாலையோரம் வியாபாரம் செய்து வருகிறார்கள். சென்னை மாநக ராட்சி சார்பில் இரண்டு மாதத்திற்கு முன்பு மழைநீர் வடிகால் பணிகளுக்கு பள்ளம் தோண்டப்பட்டு இன்னும் முடிவடையாத நிலையில், பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் சாலையோர வியாபாரிகள் மட்டு மல்லாமல் பொதுமக்கள், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். எனவே பணிகளை விரைந்து முடித்து முடித்து பள்ளங்களை மூட நட வடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட மண்டல அலுவலர் ராஜ்குமார், உடனே நடவடிக்கை எடுப்பதாகவும், அதுவரை தற்காலிகமாக மாற்று இடம் வழங்குவதாகவும், பணிகள் முடிந்தவுடன் மீண்டும் அதே இடத்தில் வியாபாரம் செய்ய முறைப்படுத்தித் தருவதாகவும் தெரிவித்தார். மேலும் பொதுமக்கள், பள்ளி குழந்தை கள் சிரமத்தை போக்க அந்த பள்ளங்கள் உள்ள இடத்தில் பாதுகாப்பு பலகைகள் அமைப்பதாகவும் உறுதி அளித்தார். அதே போல் அடையாள அட்டை இல்லாத வர்களுக்கு உடனே பரிசீலித்து வழங்கு வதாகவும் தெரிவித்தார். இதில் மாவட்டச் செயலாளர் டி.ஜெய பால், நகர விற்பனைக்குழு உறுப்பினர் ஜி.மோனிஷா, எம்.சுகுமார், பி.சீனிவாசன், நிர்வாகிகள் டி.ஜெயன், கே.இஸ்மாத் அலி, எஸ்.ஷாஜகான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.