கியூபா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க சென்னையில் கையெழுத்து இயக்கம் அமைச்சர் வன்னி அரசு தொடங்கி வைத்தார்
30 May 2026, 2:02 am
<p><strong>கியூபா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க சென்னையில் கையெழுத்து இயக்கம் அமைச்சர் வன்னி அரசு தொடங்கி வைத்தார்</strong></p><p>சென்னை, மே 29- கியூபா மீது அமெரிக்கா நடத்தி வரும் பொரு ளாதாரத் தடைகளை நீக்க வலியுறுத்தியும், அந்நாட்டின் இறை யாண்மையை மதிக்கக் கோரியும், உலக தொழிற்சங்க சம்மேளனம் முன்னெடுத்துள்ள “கியூபா விற்காக நான் கையெ ழுத்திடுகிறேன்” எனும் உலகளாவிய கையெழுத்து இயக்கம் சென்னையில் வெள்ளியன்று (மே 29) தொடங்கியது. சென்னை தியாகராய நகரில் உள்ள பாலன் இல்லத்தில், ஏஐடியூசி மாநில பொதுச்செயலாளர் இராதாகிருஷ்ணன் தலை மையில் நடைபெற்ற இந்த நிகழ்வை, தமிழ்நாடு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு முதல் கை யெழுத்திட்டுத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், அகில இந்திய வங்கி ஊழி யர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சி.எச். வெங்கடாச்சலம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத்தலைவர் ஆ. கோபண்ணா, ஏஐடியூசி தேசியச் செயலாளர் வஹிதா நிஜாம், சிபிஎம் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி. செல்வா, சிபிஐ மாநில நிர்வாக குழு உறுப்பினர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திர நாத் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலை வர்கள் மற்றும் தொழிற் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆதரவு தெரி வித்து கையெழுத்திட்டனர். கியூபாவிற்கு எதிரான அமெரிக்காவின் தாக்கு தலைக் கண்டித்தும், அந்நாட்டு மக்களின் சுய நிர்ணய உரிமையை வலி யுறுத்தியும் நடைபெற்ற இந்த நிகழ்வில், தமிழ கம் முழுவதும் மொத்தம் பத்து லட்சம் கையெழுத்து களைப் பெற்று உலக தொழிற்சங்க சம்மேள னத்திற்கு அனுப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் ஏஐடியூசி நிர்வாகிகள் மற்றும் ஏராள மான தொழிற்சங்கத் தோழர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். முடிவில் அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாநிலத் தலைவர் க. இப்ராஹிம் நன்றி கூறினார்.</p>
