முந்தய பக்கம்

சோழிங்கநல்லூர் எல்காட்டில் தீவிபத்து

16 May 2026, 10:10 pm
சோழிங்கநல்லூர் எல்காட்டில் தீவிபத்து

சோழிங்கநல்லூர் எல்காட்டில் தீவிபத்து

சென்னை, மே 16- சென்னை ஓஎம்ஆர் சாலையில், சோழிங்க நல்லூர் எல்காட்டில் தமிழ்நாடு மின்னணு நிறுவன சிறப்பு பொருளாதார மண்டலத்தில், பல்வேறு ஐடி நிறுவனங்கள் மற்றும் கார் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

இதில், சுமார் 5 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட ஐடி ஊழியர்கள் பணியாற்றி வரு கின்றனர்.

இந்நிலையில், எல்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் டெக் மகேந்திரா என்ற ஐடி நிறு வனத்துக்கு சொந்தமான பழைய மின்சாதன பொ ருட்களை வைக்கும் குடோ னில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதில், தீ விபத்தின் காரணமாக குடோனிலிருந்து பொ ருட்களில் தீப்பற்றி கொ ழுந்துவிட்டு எரிந்ததால், விண்ணை மறைக்கும் அளவுக்கு கரும்புகை வெளியேறியது.

இதனால், அப்பகுதி யில் கரும்புகை சூழ்ந் தது.

தகவல் அறிந்த தீய ணைப்புத்துறை வீரர்கள் தீயை அணைக்கும் பணி யில் ஈடுபட்டனர். மேலும், மேடவாக்கம், திருவான்மி யூர், துரைப்பாக்கம், கிண்டி, தாம்பரம், திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் இருந்த தீயணைப்பு வாகனங்கள் மற்றும் வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணி யில் ஈடுபட்டன.

கரும்புகை அதிகமாக வெளியேறிய தால், அருகி லிருந்த ஐடி நிறுவனங்களில் பணி யாற்றிக் கொண்டிருந்த ஊழி யர்கள் வெளியேற்றப் பட்டனர்.

இந்த தீ விபத்து தொடர்பாக, செம்மஞ்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து மின்கசிவு காரண மாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரித்து வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram