முந்தய பக்கம்

பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

1 Jul 2026, 11:30 pm
பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
<p><strong>பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்</strong></p><p>சென்னை, ஜூலை 1- போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, பெருநகர சென்னை காவல் துறை மற்றும் &#39;தமிழ்நாடு வாலண்டியர்ஸ்&#39; அமைப்பு இணைந்து ஜூலை 1 முதல் 15 வரை சிறப்புப் பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றன. வழக்கறிஞர், மருத்துவர், கல்வியாளர், சமூக ஆர்வலர் மற்றும் காவல்துறை அதிகாரி அடங்கிய நிபுணர் குழுவினர், சென்னையின் 100-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நேரில் சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவர். இதன் மூலம் 40,000 மாணவர்களைச் சென்றடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 104 காவல் நிலையங்கள் மூலம் 300-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் ஒருங்கி ணைக்கப்பட்டுள்ளன. மேலும், சமூக வலை தளங்களில் விழிப்புணர்வுப் பதிவுகளை இடுப வர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் திட்டமும் அறி முகப்படுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 1,00,000 மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த 500 முகாம்கள் திட்டமிடப்பட்டுள்ளன.</p>
Share
FacebookXWhatsAppTelegram