தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பெண் தொழிலாளி மீது தாக்குதல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கச் செங்கொடி சங்கம் வலியுறுத்தல்

26 May 2026, 12:42 am
பெண் தொழிலாளி மீது தாக்குதல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கச் செங்கொடி சங்கம் வலியுறுத்தல்
<p><strong>பெண் தொழிலாளி மீது தாக்குதல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கச் செங்கொடி சங்கம் வலியுறுத்தல்</strong></p><p>சென்னை, மே 25- திருவொற்றியூர் மண்டலத்தில் தூய்மைப் பணியாளர் மாரியம்மாள் மீது நடத்தப்பட்ட பாலியல் அலைக்கழிப்பு மற்றும் தாக்குதலைக் கண்டித்து, செங்கொடி சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஸ்ரீனிவாசலு சென்னை மாநகராட்சி ஆணையருக்குப் புகார் மனு அனுப்பியு ள்ளார். அந்த மனுவில், விடுப்பு முடிந்து பணிக்கு வந்த மாரியம்மாளிடம் சூப்பர்வைசர் மகேஷ் ரூ. 1,000 லஞ்சம் கேட்டு மிரட்டியதாகவும், ஆபாசமாகப் பேசி தாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மகேஷ் மற்றும் சின்னா ஆகிய இரு வரும் மாரியம்மாளின் கழுத்தை நெரித்தும், பேனாவால் குத்தியும் காயப்படுத்தியுள்ளனர். மேலும், ராம்கி நிறுவனத்தினர் காவல்துறையினரைக் கொண்டு மாரியம்மாளை மிரட்டி பொய் புகாரைப் பெறச் செய்துள்ளதாகவும், வேலையை விட்டு நீக்கிவிடுவோம் என அச்சுறுத்துவதாகவும் சாடியுள்ளார். சென்னையில் தூய்மைப் பணியாளர்க ளிடம் லஞ்சம் பெறுவதும், பெண்களைத் துன்புறுத்துவதும் தொடர்கதையாகி வருவதாகக் குறிப்பிட்ட அவர், தாக்கு தல் நடத்திய நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நஷ்ட ஈடு வழங்கி மீண்டும் அதே இடத்தில் வேலை செய்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.