சென்னை விரைவு செய்திகள்
8 Jun 2026, 11:18 pm

காலமானார்

காஞ்சிபுரம், ஜூன் 8- காஞ்சிபுரம் மாவட்ட வழக்கறிஞரும் மார்க்சிஸ்ட் கட்சியின் தோழருமான முத்துக்குமாரின் தாயார் தனம் என்கிற தனபாக்கியம் (62) நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் இயற்கை எய்தினார். மறைந்த தனபாக்கியத்தின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்டச் செயலாளர் கே. நேரு, காஞ்சிபுரம் மாநகரச் செயலாளர் டி. ஸ்ரீதர், கைத்தறி நெசவாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே. ஜீவா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலக்குழு உறுப்பினர் இ.சங்கர், வாலிபர் சங்க மாவட்ட அமைப்பாளர் டி.கோகுல் பாரதி, எம். சூரிய பாரதி, இ.சம்பத், வழக்கறிஞர்கள் எஸ்.ருத்ரநாத், பொன்னுசாமி மற்றும் பல்லவர் மேடு கட்சிக் கிளை தோழர்கள் வெங்கடேசன், விஜயகுமார், பிரகாஷ் உள்ளிட்ட பலர் நேரில் சென்று மலவளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

லாரி மோதி சென்னை உயர்நீதிமன்ற துணைப் பதிவாளர் உட்பட 2 பேர் பலி!

சென்னை, ஜூன் 8- சென்னையில் ரேஷன் பொருட்களை ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனங்கள் மீது மோதிய விபத்தில், சென்னை உயர்நீதிமன்றத் துணைப் பதிவாளர் உட்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பலியாகினர். சென்னை பேசின் பிரிட்ஜ் மூலக்கொத்தளம் சிக்னல் அருகே இன்று திங்கட்கிழமை காலை வாக னங்கள் சிக்னலுக்காக நின்று கொண்டி ருந்தன. அப்போது திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக ரேஷன் பொருட்களை ஏற்றி வந்த லாரி ஒன்று, எதிர்பாராத விதமாகக் கட்டுப்பாட்டை இழந்து முன்னே நின்று கொண்டிருந்த 3 இருசக்கர வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில், இரண்டு பேர் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் படு காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீ ஸார், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், விபத்தில் பலியானது முகப்பேர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சென்னை உயர்நீதிமன்றத் துணைப் பதிவாளர் முரளிதரன் (56) மற்றும் ஆவடி பாலமேடு காலனியைச் சேர்ந்த கவுதம் (60) என்பது தெரிய வந்தது. மேலும், இந்த விபத்தில் படுகாய மடைந்த ஆவடியைச் சேர்ந்த ராஜேஸ்வரி (45) உயர்நீதிமன்றத்தில் உதவியாளராகப் பணியாற்றி வருவதும், வியாசர்பாடியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (62) என்பவரும் படுகாயமடைந்து ஸ்டான்லி மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்துள்ளது. விபத்தை ஏற்படுத்திய கோயம்பேடு பாரதியார் நகரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ராஜ்குமார் (46) என்பவரைக் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.