தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

28 Oct 2026, 11:18 pm
சென்னை விரைவு செய்திகள்

சென்னை விரைவு செய்திகள்

போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம், அக்.28-விழுப்புரம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகமண்டல தலைமை அலு வலகம் முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் மற்றும் ஓய்வு பெற்றநல அமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைவர் ராஜாராம் தலைமையில் ஆர்ப்பாட்டம்நடை பெற்றது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சம்மேளனத்தின் பொருளாளர் சசிக்குமார், சிஐடியு,மாவட்ட செய லாளர் ஆர்.மூர்த்தி, துணைத் தலைவர் எஸ்.முத்துகுமரன், பொருளாளர் முருகன் ஆகியோர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு வரவுக்கும், செலவுக்குமான வித்தியாச தொகையை முழுமையாக போக்குவரத்து கழகத்திற்கு வழங்க வேண்டும்,தனியார் மூலம் மின்சார பேருந்து இயக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், நிலுவை தொகை வழங்க வேண்டும். காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

நண்பரைக் கொன்றவருக்குஆயுள் தண்டனை

கடலூர், அக்.28-கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஆண்டி தெருவைச் சேர்ந்தவர் ராகவன் (41), வடலூர் சத்திய ஞான சபையில் தங்கியிருந்து உணவருந்தி வந்துள்ளார். இவரது நண்பர் மேலக்குப்பம் சிட்டி தெருவைச் சேர்ந்த செல்வம் (46). கடந்த 2023 டிசம்பர் 29-ஆம் தேதி, இருவரும் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், செல்வம் கல்லால் தாக்கியதில் ராகவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து செல்வத்தைக் கைது செய்தனர். விருத்தாசலம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் நீதிபதி விஜயகுமார் செல்வத்துக்கு ஆயுள்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

ஓசூர் அதியமான் பாலிடெக்னிக்கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கிருஷ்ணகிரி, அக். 28-ஓசூர் அதியமான் பாலிடெக்னிக் கல்லுாரி மாணவ மாணவியருக்கு வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்தும் நோக்கில் கற்றல் திறன்கள் திட்டத்தில்,கல்லூரி நிர்வாகத்திற்கும் ஐ.பி.எம்.டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன்படி மாணவ மாணவியருக்கு தொழில்துறைக்கு தேவையான வேலைவாய்ப்பு திறன்கள், செய்முறை பயிற்சிகளை ஊக்குவித்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. அதன் மூலம் அதியமான் பாலிடெக்னிக் கல்லுாரியில் படிக்கும் மாணவர்களின் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். மேலும் கற்றல் திறன்கள் திட்டத்தில் மாணவர் சேர்க்கை,திறன் பயிற்சி,பயிற்சி மதிப்பீடு,சான்றிதழ் வழங்குதல், வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் போன்றவை மேற்கொள்ளப்பட உள்ளன.

அதியமான் பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் பாலாஜி பிரகாஷ் மற்றும் ஐ.பி.எம்.டெக்னாலஜிஸ் துணை மேலாளர் அனுஷா ஆகியோர், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தம் மாணவர்களின் எதிர்கால வேலை வாய்ப்பிற்கும், தொழில் வளர்ச்சிக்கும் பயனுள்ளதாக அமையும் என கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மின் ஊழியர் மத்திய அமைப்புபோராட்ட ஆயத்த கூட்டம்

கடலூர்,அக்.28-மின்வாரியத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளர்களை அடையாளம் கண்டு, தினக்கூலியாக ரூ.1,406 வழங்கி, மின்வாரியமே நேரடியாகப் பணியமர்த்த வேண்டும். மேலும், 5 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நவம்பர் 2-ஆம் தேதி முதல் மின்வாரியத் தலைமை அலுவலகம் முன்பு தொடர் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) கடலூர் மாவட்டம் சார்பில், விருத்தாசலத்தில் போராட்ட ஆயத்த பேரவை கூட்டம் நடைபெற்றது.

சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் என்.தேசிங்கு தலைமை வகித்தார். மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் டி.பழனிவேல், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் என்.கோவிந்தராசு, ஆர்.ஆறுமுகம் ஆகியோர் பேசினர்.

முன்பகையால் முதியவர் அடித்துக் கொலை

சென்னை, அக். 28-சென்னை ஓட்டேரியில் முன்பகை காரணமாக சு.பொன்னுரங்கம் (69) என்ற முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

ஓட்டேரி ரெட்டைமலை சீனிவாசன் தெருவைச் சேர்ந்த பொன்னுரங்கம் குடும்பத்தினருக்கும், சுப்பிரமணி குடும்பத்தினருக்கும் இடையே முன்பகை இருந்து வந்தது. இந்நிலையில், சுப்பிரமணியின் மகன்களான சதீஷ் (27), சந்தோஷ் (25) ஆகியோருக்கும் பொன்னுரங்கத்தின் மகன் கந்தனுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தகராறு ஏற்பட்டது.இதைத் தடுத்துக் கண்டித்த பொன்னுரங்கத்தை சதீஷும் சந்தோஷும் கொடூரமாகத் தாக்கி கீழே தள்ளினர். இதில் பலத்த காயமடைந்த பொன்னுரங்கம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஓட்டேரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய சதீஷ், சந்தோஷ் ஆகிய இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.