தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

23 Sept 2026, 1:14 am
சென்னை விரைவு செய்திகள்

டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு வணிகர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் ஏ.எம்.விக்கிரமராஜா வேண்டுகோள்

சென்னை, செப்.22-டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு வணிகர்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வேண்டு கோள் விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தற்போது மழைக்காலம் தொடங்க உள்ள நிலை யில் பரவலாக டெங்கு காய்ச்சல், டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்ற கொசு மற்றும் நீர்த்தொற்று நோய்கள் வேகமாக பரவிவருவதை செய்திகள், ஊடகங்கள் வாயிலாக தெரியவருகிறது. பொறுப்புமிக்க குடிமக்களாக அரசுக்கு உதவும் வணிகர்களாக நமது இல்லம், வணிக வளாகம், சுற்றுப்புறத்தை சுத்த மாக, சுகாதாரமாக மழைநீர், கழிவுநீர் தேங்காமல், குப்பைகளை அகற்றி அரசுக்கும், மாநகராட்சிக்கும் உரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.தொலைநோக்கு சிந்தனையோடு, பேரமைப்பு வணிகர்களும், வாடிக்கை யாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விளம்பரத் தட்டிகளை தங்களின் கடைகளில் வைத்து தமிழகத்தின் சுத்தம், சுகாதாரத்தையும், நோயற்ற வாழ்வை யும் உறுதி செய்ய வணிகர்களை கேட்டுக் கொள்கின்றோம். மேலும், தொடர் காய்ச்சல், இருமல் நோய் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகி ஆலோசகனைகள் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

குடிநீரில் கழிவுநீர் கலப்பு: பெண்கள் மறியல் போராட்டம்

அம்பத்தூர், செப். 22–ஆவடி அடுத்த பட்டாபிராம், தண்டூரை, ஏகவள்ளி அம்மன் கோவில் தெருவில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தி னர் வசிக்கிறார்கள். இப்பகுதி மக்க ளுக்கு அணைகட்டுச்சேரி ஆற்றுப் பாலம் அருகே உள்ள ஆழ் துளை கிணற்றில் இருந்து குழாய் மூலம் குடிநீர் விநி யோகிக்கப்படுகிறது.

இந்நிலையில், பட்டாபிராம் ஏரியில் இருந்து வெளியேறும் கழிவுநீர், தண்டூரை வாழைத்தோப்பு மற்றும் கந்தசாமி நகர் வழியாக ஆழ்துளை கிணற்றை சுற்றி தேங்கி நிற்கிறது. இதனால் அந்த கழிவுநீர் நிலத்தில் இறங்கி மாசடைந்துள்ளது.இதனால் ஏகவள்ளி அம்மன் கோவில் தெருவில் உள்ள குடிநீர் குழாய்களில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் ஏகவள்ளி அம்மன் கோவில் தெரு அருகே பட்டாபிராம் –பாரிவாக்கம் சாலையில் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டாபிராம் காவல் துறையினர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சுத்தமான குடிநீர் கிடைக்க நட வடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்கலாம்

திருப்பத்தூர், செப். 22 அரசு, அரசு உதவிபெறும் நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின மாணவர்களுக்கு 2026-27-ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பயிலும் மாணவர்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி உதவித்தொகை வழங்கப்படும். பாலிடெக்னிக், தொழிற்படிப்பு, முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கு குடும்ப ஆண்டு வரு மானம் ரூ.2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

தகுதியுடைய மாணவர்கள் வரும் அக்டோபர் 21-ஆம் தேதிக்குள் https://umis.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் நல்லசிவன் தெரிவித்துள்ளார்.

போதை எதிர்ப்பு விழிப்புணர்வு

திருப்பத்தூர்,செப்.22-கரியம்பட்டி அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரியின் போதைப்பொருள் எதிர்ப்பு மன்றம், நாட்டு நலப்பணித் திட்டம், ஒய்.ஆர்.சி. மற்றும் ஆர்.ஆர்.சி. சார்பில் உலக அமைதி தினம் மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் ஜெயராணி தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளர்க ளாக வழக்கறிஞர்கள் முஹம்மது பிலால், நளினி மற்றும் யோகா ஆசிரியர் ரவிச்சந்திரன் பங்கேற்று போதைப்பொருள் பாதிப்பு கள், மாணவர் ஒழுக்கம் மற்றும் சமுதாய அமைதி குறித்து உரையாற்றினர்.

சிறுமிக்கு வன்கொடுமை: முதியவருக்கு 20 ஆண்டு சிறை

கடலூர், செப்.22-புவனகிரி அருகே 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தட்சிணாமூர்த்தி (63) என்பவருக்கு 20ஆண்டுகள் சிறைத் தண்ட னை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதி மன்றம் தீர்ப்பளித்தது.கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற சம்ப வம் தொடர்பாக சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தட்சிணாமூர்த்தியை கைதுசெய்தனர். வழக்கு விசாரணை முடிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து நீதிபதி ஜி.குலசேகரன் தீர்ப்பை வழங்கி னார்.

குறைதீர் கூட்டம்

கடலூர், செப்.22-கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் மாற்றுத் திறனாளி களிடம் மனுக்களை பெற்றார்.

குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகள் பணியில் நீடிப்பது ஏன்? காவல் மரண வழக்கில் நீதிமன்றம் கேள்வி

கடலூர், செப். 22 -நெய்வேலி நகர காவல் நிலையத்தில் கடந்த 28.05.2019 அன்று சுப்பிரமணி என்ப

வர் சித்திரவதை செய்யப்பட்டு உயிரி ழந்தார். இது தொடர்பான வழக்கு, கடலூர் எஸ்.சி./எஸ்.டி. சிறப்புநீதிமன்றத்தில் நீதிபதி சரஸ்வதி (பொறுப்பு) முன்னி லையில் நடைபெற்று வருகிறது.

இவ்வழக்கில் உயிரிழந்த சுப்பிர மணியனின் மனைவி ரேவதி உள்ளிட்ட 18 சாட்சிகள் இதுவரை தங்களது சாட்சி யங்களை நிறைவு செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் ராஜா, உதவி ஆய்வாளர் சௌமியன், காவல்துறை அதிகாரி செந்தில்வேலன் ஆகியோர் திங்கள்கிழமை (செப்.21) அன்று நடைபெற்ற விசாரணையின்போது ஆஜரானார்கள். குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து காவல் பணியில் நீடித்து வருவதாகவும், காவல்துறை சாட்சிகளை அச்சுறுத்துவதாகவும் அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ஜீவக்குமார் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகள் மீது இதுவரை ஏன் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்றும், அவர்கள் வழக்கமான காவல் பணியில் இருந்து வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளனரா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாததற்கான காரணம் குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

சாட்சிகளை அச்சுறுத்துவது தொடர்பாக சிபிசிஐடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி அறி வுறுத்தினார்.

பாதிக்கப்பட்ட ரேவதி தரப்பில் வழக்கறிஞர்கள் கீர்த்திராஜ், ஜோதிலிங்கம், லெனின், மேரி, குமரகுரு, சுரேஷ் ஆகியோர் ஆஜராகி வருகின்றனர். இவ்வழக்கை கடலூர் சிபிசிஐடி காவல் துறையினர் நடத்தி வருகின்றனர்.

சாட்சிகள் விசாரணை மற்றும் மறு விசாரணைக்காக இவ்வழக்கு அக்.21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

கடலூர், செப்.22-பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் லஞ்சம் பெறப்படுவதாக வந்த புகாரையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.ஆய்வாளர் அன்பழகன் தலைமையிலா

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.