தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

4 Nov 2026, 11:45 pm
சென்னை விரைவு செய்திகள்

வாலாஜா அரசுப் பள்ளியில் மின்சாதனங்கள் திருட்டு

ராணிப்பேட்டை, நவ.4-ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த வன்னிவேடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த அக்டோபர் 24 முதல் 26 வரையிலான விடுமுறை நாட்களில் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த தண்ணீர் சுத்திகரிப்பு மின் மோட்டார், 15 மின்விசிறிகள், 15 டியூப் லைட்டுகள் மற்றும் மின் வயர்களைத் திருடிச் சென்றுள்ளனர்.பள்ளி திறக்கப்பட்டதும் இத்திருட்டு வெளிச்சத்திற்கு வந்த நிலையில், பொறுப்பு தலைமை ஆசிரியர் சதீஷ்குமார் அளித்த புகாரின் பேரில் வாலாஜா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிசிடிவி கேமராபதிவுகளைக் கொண்டு மர்ம நபர்களைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சென்னையில் டிஎச்எல் குழுமம் புதிய அலுவலகம் திறப்பு

சென்னை,நவ.4- டிஹெச்எல் குழுமத்தின் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிஹெச்எல் ஐடி சர்வீசஸ், சென்னையில் உள்ள ‘ஒன் ரேடியலில்’1,04,000 சதுர அடி பரப்பளவிலான புதிய அலுவலகத்தை திறந்துள்ளது.

இந்த புதிய அலுவலகம் இந்தியாவில் நிறுவனத்தின் திறனை விரிவுபடுத்தும் என்று அந்நிறுவனத்தின் ஐடி சேவைகளுக்கான சர்வதேச நிர்வாகி சுப்ரியா ராவ் பட்வர்தன் கூறினார். திறமையான பணியாளர்கள், தொழில்நுட்பத் திறன்கள் மற்றும் நீண்டகால வளர்ச்சியின் மீதான நிறுவனத்தின் தொடர்ச்சியான முதலீட்டையும் பிரதிபலிப்பதாகவும் அவர் கூறினார். இனி கூடுதலாக 800 பணியாளர்கள் இங்கு பணிபுரிய முடியும்.

ராணிப்பேட்டை அருகே கஞ்சாகுட்கா கடத்திய இருவர் கைது

ராணிப்பேட்டை, நவ.4-ராணிப்பேட்டை மாவட்டத்தில் போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

வாலாஜா கரிக்கல் சுடுகாடு அருகில் காவல் ஆய்வாளர் சக்திகணேஷ் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சட்டவிரோதமாகக் கஞ்சா விற்றகரிக்கல் பகுதியைச் சேர்ந்த கோபி (25) என்பவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து 250 கிராம்கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு வாலாஜா கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதேபோல், சிப்காட் காவல் எல்லைக்குட்பட்ட லாலாபேட்டை ஜங்ஷனில் காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி தலைமையிலான காவல்துறையினர் வாகனத்தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, வெளிமாநிலத்திலிருந்துகாரில் கடத்தி வரப்பட்ட ரூ.1,50,000 மதிப்புள்ள 226 கிலோ தடை செய்யப்பட்ட குட்காவைக் கைப்பற்றினர். இக்கடத்தலில் ஈடுபட்ட ஆந்திர மாநிலம் சித்தூரைச்சேர்ந்த ரமேஷ் (45) என்பவரைக் கைது செய்த காவல்துறையினர், கடத்தலுக்குப் பயன்படுத்திய காரையும் பறிமுதல்செய்தனர்.

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

அம்பத்தூர், நவ.4-அம்பத்தூர் ஆசிரியர் காலனி 2-ஆவது தெருவில் கட்டப்பட்டு வரும் வீட்டில் வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்த ராமநாதபுரம் குருணிச்சரி கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி (45) என்பவர், ஈரமான மூங்கில்

ஏணி மின்கம்பியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அம்பத்தூர் காவல்துறையினர் அவரது சலத்தைக் கைப்பற்றிக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வழக்குப்பதிவு செய்தனர். ஏற்கெனவே இப்பகுதியில் மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதால், புதைவட மின் கேபிள் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திரையரங்குகளில் 6 காட்சிகளுக்கு அனுமதி திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சி

சென்னை, நவ.4-தமிழ் திரையுலகம் சார்பில் முதலமைச்சர்ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்ததாகத் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர்திருப்பூர் சக்தி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். 1952-ஆம் ஆண்டின் திரையரங்கு விதிமுறைகளில் மாற்றம் கோரப்பட்ட நிலையில்,தற்போது 6 காட்சிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது தீபாவளிப் பரிசாகும் என அவர் குறிப்பிட்டார்.அண்டை மாநிலங்களைப் போலக் காலை 6 மணி காட்சிகளுக்கு அனுமதிஅளித்துள்ளதன் மூலம் சிறிய பட்ஜெட் திரைப்படங்களும், புதிய தயாரிப்பாளர்களும் அதிக பயனடைவர். தமிழகத்தில் உள்ள 1,800 திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் திரையிடப்படுவதால் அரசுக்குவரி வருவாய் அதிகரிக்கும். கூட்ட நெரிசலைத்தவிர்க்கத் திரையரங்குகளில் 10 முதல்15 நிமிட இடைவெளியில் காட்சிகளைத் தொடங்குமாறும், அதிகாலைக் காட்சிகளுக்கு உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

24 மணி நேரமும் திரையரங்குகளை இயக்குவது குறித்த கேள்விக்கு, தற்போதுகிடைத்துள்ள 6 காட்சிகள் அனுமதியே திருப்தியளிப்பதாகவும், மற்ற மாநில நடைமுறைகளை ஆய்வு செய்த பிறகே அடுத்தகட்ட கோரிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும்,இனிவரும் காலங்களில் தயாரிப்பு நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாகஅறிவிக்கும் வசூல் விவரங்களை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.