தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நவதாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக நிரந்தர, ஒப்பந்த தொழிலாளர்களின் ஒற்றுமை அவசியம்! சென்னை கருத்தரங்கில் டாக்டர் ஹேமலதா வலியுறுத்தல்

29 Sept 2026, 12:53 am
நவதாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக நிரந்தர, ஒப்பந்த தொழிலாளர்களின் ஒற்றுமை அவசியம்!  சென்னை கருத்தரங்கில் டாக்டர் ஹேமலதா வலியுறுத்தல்

நவதாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக நிரந்தர, ஒப்பந்த தொழிலாளர்களின் ஒற்றுமை அவசியம்! சென்னை கருத்தரங்கில் டாக்டர் ஹேமலதா வலியுறுத்தல்

சென்னை, செப். 28நவதாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் ஒற்றுமை அவசியம் என்று சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் டாக்டர் ஹேமலதா வலியுறுத்தினார்.சம வேலைக்கு சம ஊதியம், பிஎப், இஎஸ்ஐ, போனஸ் கேட்டு ரயில்வே கான்ட்ராக்ட் லேபர் யூனியன்களின் தேசிய கருத்தரங்கம் செப்டம்பர் 28, 29 தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது.

திங்களன்று தொடங்கிய கருத்தரங்கை அகில இந்தியத் துணைத் தலைவர் டாக்டர் கே. ஹேமலதா தொடங்கி வைத்துப் பேசுகையில், அரசு, பொது மற்றும் தனியார் துறைகளில் நிரந்தரப் பணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து, ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரயில்வே துறையில் ரயில் ஓட்டுநர்களைத் தவிர்த்து சிக்னலிங், கேட்டரிங், தூய்மைப் பணி, மின்சாரம், தண்டவாளப் பராமரிப்பு உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும்லட்சக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர் என்றார்.

ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிலை

ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது. கிராஜுவிட்டி, ஓய்வூதியம், பிஎப், இஎஸ்ஐ போன்ற எவ்வித சமூகப் பாதுகாப்பு வசதிகளோ அல்லது குறைந்தபட்ச ஊதியமோ அவர்களுக்குக் கிடைப்பதில்லை. உயர்கல்வி மற்றும் தொழில்முறைப் பட்டங்கள் பெற்ற இளைஞர்கள் கூட வேலைவாய்ப்பின்மை காரணமாக ரூ.10,000 முதல் ரூ.15,000 வரையிலான குறைந்த ஊதியத்திற்கு இத்தகைய ஒப்பந்தப் பணிகளில் சேரும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

4 தொகுப்புச் சட்டங்களுக்கு எதிர்ப்பு

பாஜக அரசு தீவிரமாக அமல்படுத்தி வரும் நவதாராளமயக் கொள்கைகளும், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான சட்டத் திருத்தங்களுமே தொழிலாளர்களின் இந்த வேலை பாதுகாப்பற்ற நிலைக்குக் காரணமாகும். தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம், ஓய்வூதியம், சங்கம் அமைக்கும் உரிமை மற்றும் வேலைநிறுத்த உரிமைகளைப் பறிக்கும் வகையில் ‘தொழிலாளர் சட்டத் தொகுப்புகள்’ உருவாக்கப்பட்டு, தற்போது பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஒற்றுமையே பலம்

விசாகப்பட்டினம் மாநாட்டிற்குப் பிறகு, நாடு முழுவதும் குறைந்தபட்ச ஊதியம் பெறவும், ஒப்பந்ததாரர் மாறினாலும் வேலை இழப்பு ஏற்படாமல் தடுக்கவும், நிலுவை ஊதியத்தைப் பெறவும் பல போராட்டங்களை நடத்தி தொழிற்சங்கங்கள் வெற்றிகளைப் பெற்றுள்ளன. அரசு நிர்வாகம், காவல்துறை என அனைத்தும் அரசின் பக்கம் இருந்தாலும், தொழிலாளர்களின் ஒரே பலம் அவர்களின் ஒற்றுமை மட்டுமே. ஆனால், வேலைவாய்ப்பின்மைக்கு இட ஒதுக்கீடு மற்றும் வெளிமாநிலத் தொழிலாளர்களே காரணம் என்று கூறியும்; மதம், சாதி, மொழி மற்றும் பிராந்தியத்தின் பெயராலும் தொழிலாளர் வர்க்கத்தைப் பிரிக்க முயற்சிகள் நடக்கின்றன.

ஒருங்கிணைந்த போராட்டம்

நாட்டின் வாழ்வாதாரக் கோடாகத் திகழும் ரயில்வேயில், அதிகாரப்பூர்வமாக 5 லட்சத்திற்கும் அதிகமான (உண்மையில் 7 முதல் 8 லட்சம் வரை) ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளனர். சரக்கு கிடங்கு, தூய்மைப் பணி, தண்டவாளப் பராமரிப்பு என அனைத்துப் பிரிவுகளிலும் உள்ள ஒப்பந்தத் தொழி

லாளர்களை தேசிய அளவில் ஒருங்கிணைக்க சிஐடியு திட்டமிட்டுள்ளது. நிரந்தரத் தொழிலாளர்களையும் ஒப்பந்தத் தொழிலாளர்களையும் ஒருங்கிணைத்துப் போராடாத வரை, தொழிலாளர் விரோத நவதாராளமயக் கொள்கைகளை வீழ்த்த முடியாது. எனவே, ‘ஒற்றுமை மற்றும் போராட்டம்’ என்ற முழக்கத்தோடு, அனைத்துப் பிரிவு ரயில்வே தொழிலாளர்களையும் ஒன்றிணைத்து வலுவான இயக்கத்தைக் கட்டியெழுப்ப ரயில்வே ஒப்பந்தத் தொழிலாளர் சங்கங்கள் முன்வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.முன்னதாகச் சங்கக் கொடியை மூத்த தலைவர் ஆர்.ஜி. பிள்ளை ஏற்றி வைத்தார். தமிழ் மாநிலப் பொதுச்செயலாளர் பா. ராஜாராமன் வரவேற்றார். சிஐடியு அகில இந்தியத் துணைத் தலைவர் அ. சவுந்தரராசன் வாழ்த்திப் பேசினார். அகில இந்திய கன்வீனர் ரமேஷ்பாபு அறிக்கை சமர்ப்பித்தார். இதில் ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்கம், கேரளம், தமிழ்நாடு, ஒடிசா, உத்தரப்பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலிருந்து 122 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.