தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை - புதுச்சேரி பயண நேரம் 2.5 மணி நேரமாகக் குறைகிறது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல்

59 minutes before
சென்னை - புதுச்சேரி பயண நேரம் 2.5 மணி நேரமாகக் குறைகிறது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல்
<p><strong>சென்னை - புதுச்சேரி பயண நேரம் 2.5 மணி நேரமாகக் குறைகிறது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல்</strong></p><p>புதுச்சேரி, ஜூலை 10- சென்னை மற்றும் புதுச்சேரி இடையே யான பயண நேரத்தைக் கணிசமாகக் குறைத்து, பிராந்தியப் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பல்வேறு அதிரடி உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. புதுச்சேரியில் நடைபெற்ற பயிற்சி முகாம் ஒன்றில் கலந்து கொண்ட தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சென்னை மண்டல அலுவலர் வீரேந்திர சாம்பியால், இது தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். ஈசிஆர் நான்குவழிச்சாலை தற்போது புதுச்சேரியில் என்.எச். 32, 332 மற்றும் 332A ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளை உள்ளடக்கிய 38 கி.மீ தூரப் பகுதிகளில் ரூ. 1,619 கோடி மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மிக முக்கியத் திட்டமாக, மாமல்லபுரம் முதல் புதுச்சேரி வரையிலான கிழக்குக் கடற்கரைச் சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக மாமல்லபுரம் முதல் மரக்காணம் வரையிலான 61 கி.மீ தூரப் பணிகள், ரூ. 2,477 கோடி செலவில் மார்ச் 2027-க்குள் முடிக்கும் வகையில் தீவிரமாக நடைபெறுகின்றன. இதனைத் தொடர்ந்து, மரக்காணம் முதல் புதுச்சேரி வரையிலான மீதமுள்ள 46 கி.மீ மற்றும் புதுச்சேரி பைபாஸ் சாலைக்கான பணிகள் வரும் அக்டோபர் மாதம் தொடங்கப்பட உள்ளன. பயண நேரம் குறையும் இந்தச் சாலைத் திட்டங்கள் அனைத்தும் நிறைவடையும் போது, சென்னை - புதுச்சேரி இடையேயான தற்போதைய 4 மணி நேரப் பயணம் வெறும் 2.5 முதல் 3 மணி நேரமாகச் சுருங்கும். இதுதவிர, விழுப்புரம் - புதுச்சேரி - நாகப்பட்டினம் இடையிலான 180 கி.மீ வழித்தடப் பணிகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இது சென்னை - நாகப்பட்டினம் இடையேயான பயண நேரத்தை 7.5 மணி நேரத்திலிருந்து 5.5 மணி நேரமாகக் குறைக்கும். ஜிப்மர் மருத்துவமனை எதிரே லிப்ட் வசதியுடன் நடைமேம்பாலம் நகர்ப்புறப் போக்குவரத்தைச் சீரமைக்க ஜிப்மர் மருத்துவமனை எதிரே ரூ. 2.24 கோடியில் லிப்ட் வசதி யுடன் கூடிய பாதசாரி மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரியின் முக்கியப் பகுதிகளான இந்திரா காந்தி சதுக்கத்தையும் ராஜீவ் காந்தி சதுக்கத்தையும் இணைக்கும் வகையில், ரூ. 436 கோடி மதிப்பீட்டில் 3.88 கி.மீ நீளத்திற்கு உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான ஒப்பந்தப் பணிகளும் வழங்கப்பட்டுள்ளன. இப்பணிகள் விரைவில் தொடங்கி 30 மாதங்களில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும். இந்தத் திட்டங்கள் அனைத்தும் புதுச்சேரியின் சுற்றுலா, போக்குவரத்து மற்றும் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.