தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தில்லியில் மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து

yesterday
தில்லியில் மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து

தில்லியில் மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து

சென்னையில் வாலிபர்கள், மாணவர்கள் பேரணி!

சென்னை, ஜூலை 21- நீட் தேர்வுக்கு எதிராகத் தலைநகர் தில்லியில் அமைதியான முறையில் பேரணி நடத்திய மாணவர்கள் மீது தடி தாக்குதல் நடத்திய ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, சென்னையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) கண்டனப் பேரணி நடைபெற்றது. வாலிபர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் வே. அருண்குமார் தலைமையில் நடை பெற்ற இந்தப் பேரணியில், ஜனநாயக வழியில் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறையைக் கண்டித் தும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் கண்டன முழக் கங்கள் எழுப்பப்பட்டன.

தலைவர்கள் உரை

இந்தப் பேரணியில் வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ். கார்த்திக், பொருளாளர் தீ. சந்துரு, மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சி. மிருதுளா, மாநிலச் செய லாளர் தௌ. சம்சீர் அகமது ஆகி யோர் பங்கேற்று கண்டன உரையாற்றி னர். மேலும் வாலிபர் சங்க மாநில நிர்வாகிகள் அபிராமி, ஜி.அரவிந்த சாமி, மாணவர் சங்க நிர்வாகிகள் கு. தமிழ், அகல்யா, அனந்தகுமார் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

மாணவர்கள், வாலிபர்கள் கைது

போராட்டத்தில் ஈடுபட்ட மாண வர்கள் பேரணியின் முடிவில் எழும்பூர் ஆல்பர்ட் திரையரங்கம் அருகில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அனைவரும் சாலையில் அமர்ந்து ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். நீட்தேர்வு முறைகேடு களுக்கு பொறுப்பேற்று ‘ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவிநீக்கம் செய்யக்கோரி முழக்க மிட்டனர். காவல்துறை அதிகாரிகள் போராட்டம் நடத்த அனுமதியில்லை என்று கூறி அனைவரையும் கைது செய்தனர். அப்போது காவல் துறையி னருக்கும் மாணவர்களுக்கும் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஒரு மாணவர் மயங்கி விழுந்தார். அவருக்கு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

புதுச்சேரியில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரி, ஜூலை 21- தில்லியில் அமைதியான முறை யில் போராட்டம் நடத்திய மாணவர் கள் மீது காவல்துறை நடத்திய தாக்கு தலைக் கண்டித்துப் புதுச்சேரியில் தீப்பந்தங்களை ஏந்தி மாணவர்கள் தீவிர கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். நீட் தேர்வு குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடி யாகப் பதவி விலக வேண்டும் என்றும், 20 நாட்களுக்கும் மேலாக அமைதியான முறையில் உண்ணாநிலைப் போராட் டம் மேற்கொண்ட சமூகச் செயற்பாட் டாளரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக்கை கைது செய்ததைக் கண்டித்தும் இப்போராட்டம் நடத்தப் பட்டது. நாடாளுமன்றத்தை நோக்கி அமைதியான முறையில் பேரணியாகச் சென்ற மாணவர்களின் போராட் டத்தைச் சிதைக்கும் வகையில் தடியடி நடத்திய ஒன்றிய பாஜக அரசின் போக்கைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. புதுச்சேரி காமராஜர் சிலை எதிரில் தீப்பந்தங்களுடன் நடைபெற்ற இந்தக் ஆர்ப்பாட்டத்திற்கு, இந்திய மாணவர் சங்கத்தின் புதுச் சேரி மாநிலத் தலைவர் ஸ்டீபன் ராஜ் தலைமை தாங்கினார். மாநிலச் செய லாளர் பிரவீன் குமார், இந்திய ஜன நாயக வாலிபர் சங்க மாநிலச் செய லாளர் சஞ்சய்சேகரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முன்னதாக மாணவர்கள் கைக ளில் தீப்பந்தங்கள் ஏந்தி ஒன்றிய பாஜக அரசிற்கு எதிராகக் முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகிகள் அகிலா, சுகவாணன், சூர்யா, அக்னி, ஆகாஷ், தருண், அஜய் உள்ளிட்ட திரளான மாணவர்கள் கலந்துகொண்ட னர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.