தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை - புதுச்சேரி இடையே படகு சேவை திட்டம்: வேகமெடுக்கும் பணிகள்!

8 hours before
சென்னை - புதுச்சேரி இடையே  படகு சேவை திட்டம்: வேகமெடுக்கும் பணிகள்!

சென்னை - புதுச்சேரி இடையே படகு சேவை திட்டம்: வேகமெடுக்கும் பணிகள்!

சென்னை,நவ.3-கடலோரச் சுற்றுலாவை மேம்படுத்தவும், கிழக்குக் கடற்கரைச் சாலையில் மாற்றுப் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தவும் சென்னை, மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரி ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் பயணிகள்படகு சேவையைத் தொடங்குவது குறித்து தமிழ்நாடு அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.இத்திட்டத்திற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பிடவும், தனியார் துறையின் ஆர்வத்தைக் கண்டறியவும் தமிழ்நாடு கடல்சார் வாரியம் படகு நிறுவனங்களிடமிருந்து விருப்ப மனுக்களை வரவேற்றுள்ளது.

நம்பத்தகுந்த வட்டாரங்களின்படி, இந்த வழித்தடத்திற்குப் பொருத்தமானபடகுகள், பயணிகளின் கொள்ளளவு, சேவை செய்யப்படும் நேர இடைவெளி மற்றும் சாத்தியமான பயணியர் தேவை குறித்து பரிந்துரைக்க விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்

செல்வதற்கு முன், அதன் வணிக ரீதியான மற்றும் செயல்பாட்டு சாத்தியக்கூறுகளை மதிப்பிட இத்தகவல்கள் கடல்சார் வாரியத்திற்கு உதவும்.வங்க கடலோரம் உள்ள மூன்று முக்கிய சுற்றுலாத் தலங்களை இணைத்து, ஒரு ஒருங்கிணைந்த கடலோரச்சுற்றுலா மண்டலமாக உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இத்திட்டம் மத்திய அரசு, தமிழ்நாடுஅரசு, புதுச்சேரி அரசு, துறைமுக அதிகாரிகள் மற்றும் பிற ஒழுங்குமுறை அமைப்புகளின் ஒருங்கிணைப்புடன் உருவாக்கப்பட உள்ளது.

இருப்பினும், இத்திட்டத்தின் வெற்றி என்பது பயணிகளின் தேவை, பயணக் கட்டணம், பயண நேரம், சேவையின் நம்பகத்தன்மை மற்றும் பருவக்கால மாற்றங்களைப் பொறுத்தேஅமையும். மேலும், ஆண்டிற்கு எத்தனை நாட்கள் படகுகளை இயக்க முடியும் என்பதும், சாலைப் போக்குவரத்துடன் ஒப்பிடும்போது கடல்வழிப் பயணம் எந்த அளவிற்குப் போட்டியாக இருக்கும் என்பதும் முக்கியக் காரணிகளாகப் பார்க்கப்படுகின்றன.திட்டமிடப்பட்டுள்ள இந்த வழித்தடம் வங்காள விரிகுடாவின் திறந்தகடல் வழியே செல்வதால், தென்மேற்குமற்றும் வடகிழக்கு பருவமழைக் காலங்களில் கடல் அலைகளின் சீற்றம் மாறுபடும். எனவே, கடல் நிலவரங்களை ஆய்வு செய்து, நிலவும் காலநிலைக்கு ஏற்ப இயங்கக்கூடிய படகுகளைப் பரிந்துரைக்குமாறு தமிழ்நாடு கடல்சார் வாரியம் நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

இத்திட்டத்தில் உள்ள ஒரு முக்கியஉள்கட்டமைப்புச் சவால் என்னவெனறால், மாமல்லபுரத்தில் பயணிகள் படகுவந்து செல்வதற்கான தளம் எதுவும் தற்போது இல்லை என்பதாகும். மாமல்லபுரம் ஒரு யுனெஸ்கோ உலகப்பாரம்பரியக் களம் என்பதால், அங்கு உருவாக்கப்படும் எந்தவொரு புதிய உள்கட்டமைப்புக்கும் தொல்லியல்மற்றும் சுற்றுச்சூழல் துறைகளின் சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற வேண்டும்.

தற்போது சென்னை துறைமுகத்தின் ‘டாக்டர் அம்பேத்கர் டாக்’ மேற்குப்பகுதியில் பயணிகளுக்கான கப்பல் முனையம் உள்ளது. 4,103 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்த முனையம், மணிக்கு 800 பயணிகளைக் கையாளக்கூடியது; மேலும் 11 மீட்டர் ஆழம் கொண்ட 340 மீட்டர் நீளமுள்ள பெரிய கப்பல்களைக் கூட நிறுத்தும் வசதி கொண்டது. அதேபோல, புதுச்சேரி துறைமுகத்தில் 150 மீட்டர் நீளமுள்ள தளம் உள்ளது. இது 2 மீட்டர்ஆழம் கொண்ட பயணிகள் படகுகளை நிறுத்தும் வசதி கொண்டது.இத்திட்டத்தில் ஆர்வமுள்ள நிறுவனங்கள் டிசம்பர் 1-ஆம் தேதிக்குள் மாநில அரசின் மின்னணு கொள்முதல் இணையதளம் வழியாகத் தங்களதுவிருப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.