சென்னை விரைவு செய்திகள்
3 Jun 2026, 12:37 am

ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி

திருவள்ளூர், ஜூன் 2- திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாயன்று நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ச.கவிதா கலந்துகொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று இந்நிகழ்வைத் துவக்கி வைத்தார். இவ்விழாவில் ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் ராஜேஷ், பயிற்சித் துணை ஆட்சியர் சண்முகப்பிரியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன் மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பி னர் எஸ்.விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஜமாபந்தி முகாமில் ஊத்துக்கோட்டை, பெரிய பாளையம், கன்னிகைப்பேர், வேளகாபுரம், பெண்ணாலூ ர்ப்பேட்டை உள்ளிட்ட வருவாய்த்துறைக்கு உட்பட்ட ஐந்து பிர்காக்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது வீட்டு மனைப் பட்டா மற்றும் அடிப்படைத் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் கோரி விண்ணப்பங்களை எழுதிக் கொடுத்தனர்.

சென்னையில் இன்று மின்தடை

சென்னை, ஜூன் 2- பராமரிப்புப் பணிகள் காரணமாக புதனன்று (ஜூன் 3) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சென்னையில் மின் விநி யோகம் நிறுத்தப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மின்தடை பகுதி திருமங்கலம் பகுதிக்கு உட்பட்ட மெட்ரோ ஜோன், சத்தியசாய் நகர், பாடிகுப்பம் பிரதான சாலை, வீட்டு வசதி வாரிய குடி யிருப்பு, பழையபென், கோல்டன் ஜூபிலி அப்பார்ட் மென்ட், பாலாஜி நகர், காமராஜ் நகர், பெரியார் நகர், வி.ஜி.என், அம்பேத்கர் நகர், மேத்தா ராயல் பார்க், ரயில் நகர், 100 அடி சாலை, சீனிவாசன் நகர், சிவன் கோயில் தெரு, மாடவீதிகள், நியூகாலனி, மேட்டுக்குளம் மற்றும் அதன் சுற்றுவட் டாரப் பகுதிகள்.