தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை துறைமுகம் - மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலப் பணிகள் அடுத்தாண்டு நிறைவடையும் சென்னை துறைமுக ஆணையத் தலைவர் எஸ். விஸ்வநாதன் தகவல்

23 May 2026, 12:43 am
சென்னை துறைமுகம் - மதுரவாயல் ஈரடுக்கு  மேம்பாலப் பணிகள் அடுத்தாண்டு நிறைவடையும்   சென்னை துறைமுக ஆணையத் தலைவர் எஸ். விஸ்வநாதன் தகவல்

சென்னை துறைமுகம் - மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலப் பணிகள் அடுத்தாண்டு நிறைவடையும் சென்னை துறைமுக ஆணையத் தலைவர் எஸ். விஸ்வநாதன் தகவல்

சென்னை,மே 22- சென்னை துறைமுகம் - மதுர வாயல் ஈரடுக்கு மேம்பாலப் பணிகள் 2027-ஆம் ஆண்டு நவம்பர் மாதத் திற்குள் நிறைவடையும் என்று சென்னைத் துறைமுக ஆணையத் தலைவர் எஸ். விஸ்வநாதன் தெரி வித்துள்ளார்.

2025–26 நிதியாண்டில் சென்னை மற்றும் காமராஜர் துறை முகங்களின் செயல்பாடுகள் குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறு சாதனைகளை யும் உள்கட்டமைப்பு மேம்பாடுகளை யும் விரிவாக விளக்கினார்.

இந்த இரு துறைமுகங்களிலும் சரா சரியாக ஒவ்வொரு 80 வினாடிக் கும் ஒரு கார் ஏற்றுமதி செய்யப்பட் டுள்ளது.

தினமும் சுமார் 3 லட்சம் டன் சரக்குகள் வீதம், மொத்தம் 107 மில்லியன் டன் சரக்குகள் கையாளப் பட்டுள்ளன.

இதில் சென்னை துறை முகம் 57.9 மில்லியன் டன்னும், காமரா ஜர் துறைமுகம் 49.08 மில்லியன் டன்னும் கையாண்டு, முந்தைய நிதி யாண்டின் 103.37 மில்லியன் டன் என்ற சாதனையை முறியடித்துள்ளன.

காமராஜர் துறைமுகம் வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் தனது சரக்கு கையாளும் திறனை 100 மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு உயர்த்த இலக்கு நிர்ண யித்துள்ளது.

வாகன ஏற்றுமதியைப் பொறுத்த வரை, சென்னைத் துறைமுகம் 2,04,165 கார்களை ஏற்றுமதி செய்து 11.5 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது. காமராஜர் துறைமுகம் 1,91,825 வாகனங்களைக் கையாண்டுள்ளது, இது முந்தைய நிதியாண்டைவிட 18.86 விழுக்காடு அதிகமாகும்.

மேலும், காம ராஜர் துறைமுகம் 440 கோடி ரூபாய் முதலீட்டில், 17 மீட்டர் ஆழத்துடன் பெரிய கப்பல்களும் வந்து செல்லும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

நிதி மற்றும் உள்கட்டமைப்பைப் பொறுத்தவரை, இரு துறைமுகங் களும் இணைந்து மொத்தம் 2,400 கோடி ரூபாய் வருவாயைப் பதிவு செய்துள்ளன.

இதில் சென்னை துறை முகத்தின் செயல்பாட்டு வருமானம் 1,185.01 கோடி ரூபாயாகவும், காம ராஜர் துறைமுகத்தின் செயல்பாட்டு வருமானம் 1,239.15 கோடி ரூபாயாக வும் உள்ளது.

காமராஜர் துறை முகத்தின் நிகர சொத்து மதிப்பு 3,356.39 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இரு துறைமுகங்களும் இணைந்து கடந்த நிதியாண்டில் மொத்தம் 992 கோடி ரூபாய் மூலதன முதலீடு செய்துள் ளன.

மேம்பாட்டுப் பணிகளில், சென்னை துறைமுகம் - மதுரவாயல் நான்கு வழி ச்சாலை உயர்மட்டப் பாதை திட்டத்திற்கு 3,570 கோடி ரூபாயும், துறைமுக உட்சாலைகளுடன் இணைக் கும் தரைமட்டச் சாலை மற்றும் சந்திப்பு மேம்பாட்டுப் பணிகளுக்கு 37.18 கோடி ரூபாயும் செலவிடப் பட்டுள்ளன.

வடக்குப் பகுதி நுழை வாயில் வளாகம் மற்றும் இணைப்புச் சாலைகளுக்கு 68 கோடி ரூபாயும், பொதுச் சரக்கு மற்றும் வாகனங்க ளுக்கான ரயில் பாதை அமைக்க 65.36 கோடி ரூபாயும் பயன்படுத் தப்பட்டுள்ளன. சமூகப் பங்களிப்பாக, சென்னை துறைமுக மருத்துவமனையின் உள் கட்டமைப்பு வசதிகள் பலப்படுத்தப் பட்டதால், வெளி மருத்துவமனை களுக்கு நோயாளிகளைப் பரிந்து ரைப்பது குறைந்து, மருத்துவச் செல வினங்களில் 5.87 கோடி ரூபாய் சேமி க்கப்பட்டுள்ளது.

இங்குள்ள சித்த மருத்துவ சேவை மூலம் 10,280 பேர் பயனடைந்துள்ளனர்.

அதேபோல், சென்னை துறைமுக கல்வி அறக் கட்டளைப் பள்ளியில் எல்கேஜி முதல் 12ஆம் வகுப்பு வரை 1,000 மாண வர்கள் படித்து வருகின்றனர். இதற்கான நிதியுதவியாக கடந்த கல்வியாண்டில் 68.33 லட்சம் ரூபாய் செலவிடப்பட் டுள்ளது.

இப்பள்ளி பத்தாம் வகுப்பில் 98.5 விழுக்காடு தேர்ச்சியும், 12ஆம் வகுப்பில் 97 விழுக்காடு தேர்ச்சியும் பெற்றுச் சாதனை படைத்துள்ளதாக எஸ். விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.