சென்னை துறைமுகத்தில் ரசாயன வாயு கசிவு தலைமைச் செயலகம், ரிசர்வ் வங்கி பகுதிகளில் மக்கள் மூச்சுத்திணறல்
3 Jun 2026, 12:39 am
<p><strong>சென்னை துறைமுகத்தில் ரசாயன வாயு கசிவு தலைமைச் செயலகம், ரிசர்வ் வங்கி பகுதிகளில் மக்கள் மூச்சுத்திணறல்</strong></p><p>சென்னை, ஜூன் 2- சென்னை துறைமுக வளாகத்தில் ஏற்பட்ட திடீர் சல்பர் (கந்தகம்) வாயு கசிவு காரணமாக, தலைமைச் செயல கம், ரிசர்வ் வங்கி மற்றும் உயர்நீதி மன்றப் பகுதிகளில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கண் எரிச்சல், மூச்சுத் திணறலால் பெரும் அவதிக்குள்ளா கினர். சென்னை காமராஜர் சாலை மற்றும் தலைமைச் செயலகத்திற்கு எதிரே உள்ள வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாயன்று மதியம் 12.15 மணியளவில் திடீரென வெள்ளை நிறப் புகை சூழ்ந்து பரபரப்பை ஏற்படுத் தியது. இதனால் அப்பகுதிக்கு வந்த பொதுமக்கள் மற்றும் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளுக்கு திடீரென இருமல், கண் எரிச்சல் மற்றும் சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டதால் பெரும் பதற்றமடைந்தனர். இதுகுறித்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், அருகில் உள்ள சென்னை துறைமுக வளாகத்தில் கொட்டப்பட்டிருந்த கந்தகம் கோடை வெப்பம் காரண மாக வேதியியல் மாற்றம் அடைந்து தீப்பிடித்ததாலோ அல்லது அங்கிருந்த கண்டெய்னர் ஒன்றில் ஏற்பட்ட கசிவு காரணமாகவோ இந்த நச்சு வாயு காற்றில் பரவியது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு வாக னங்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வக வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. நச்சு வாயுவின் தன்மையைக் கண்டறிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதோடு, ரசாயனப் பொடிகளைத் தூவி வாயுவைக் கட்டுப் படுத்தும் பணியில் தீயணைப்புத் துறை யினரும் துறைமுக ஊழியர்களும் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு வாயு கசிவு முழுமையாகச் சரி செய்யப் பட்டது. காற்றில் இந்த வாயு கலந்து விட்டதால் பெரிய அளவில் பாதிப்பு கள் ஏதும் இருக்காது எனத் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இத்திடீர் வாயு கசிவு சம்பவத்தால் சென்னை கடற்கரைச் சாலைப் பகுதியில் சில மணி நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.</p>
