ஜூன் 19 பொது விநியோக குறைதீர் முகாம்
11 Jun 2026, 12:23 am
<p><strong>ஜூன் 19 பொது விநியோக குறைதீர் முகாம்</strong></p><p>சென்னை, ஜூன் 10- தமிழ்நாடு முழுவதும் பொது விநியோகத்திட்டத்தின் பயன்களைக் குடிமக்கள் எளிதில் பெறும் வகையில், ஒவ்வொரு மாதமும் வட்ட வாரியாக மக்கள் குறைதீர் முகாம்களை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஜூன் 2026 மாதத்திற்கான மாதாந்திர மக்கள் குறைதீர் முகாம், சென்னையில் உள்ள உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங் களில் வருகிற ஜூன் 13-ம் தேதி வெள்ளிக் கிழமை நடைபெறவுள்ளது. இம்முகாம் முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். இதில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் மற்றும் கைப்பேசி எண் பதிவு அல்லது மாற்றம் போன்ற சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாயவிலைக்கடைகளில் நேரில் சென்று பொருள்கள் பெற இயலாத மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு, அங்கீகாரச் சான்று வழங்கும் வசதியும் செய்யப்பட்டுள் ளது. அதேபோல், நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் தனி யார் சந்தையில் விற்கப்படும் நுகர்வோர் பொருள்கள் தொடர்பான புகார்களைப் பொதுமக்கள் இம்முகாமில் தெரிவிக்க லாம். அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சேவைகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்களுக்கு வரும் கடவுச்சொல் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும் என்பதால், குடும்ப அட்டைதாரர்கள் தங்களது பதிவு செய்யப் பட்ட கைப்பேசியுடன் அந்தந்த மண்டல அலுவலகங்களுக்கு நேரில் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத் தப்பட்டுள்ளது.</p>
