முந்தய பக்கம்

ஆன்லைன் பொருள் கிடங்கில் தீ விபத்து: காவலாளி மூச்சுத்திணறி உயிரிழப்பு

4 Nov 2026, 1:22 am
ஆன்லைன் பொருள் கிடங்கில் தீ விபத்து:  காவலாளி மூச்சுத்திணறி உயிரிழப்பு

ஆன்லைன் பொருள் கிடங்கில் தீ விபத்து: காவலாளி மூச்சுத்திணறி உயிரிழப்பு

சென்னை, நவ. 3-சென்னை பெரவள்ளூர் தெற்கு அகரம் எஸ்ஆர்பி கோயில் தெருவில் இயங்கிவரும் தனியார் ஆன்லைன் பொருள் விற்பனை நிறுவனக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சுத் திணறி காவலாளி ராமமூர்த்தி (54) உயிரிழந்தார்.

கிடங்கில் இருந்து

கரும்புகை வெளியேறி யதைப் பார்த்து உள்ளே சென்றபோது புகையினால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர்மயங்கி விழுந்த நிலையில், பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் ஏற்கனவேஇறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கொளத்தூர் மற்றும் செம்பியம் தீயணைப்பு வீரர்கள் சுமார் 2மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமாக ஏற்பட்ட இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமான நிலையில்,பெரவள்ளூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram