தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆன்லைன் அபராதத்தை ரத்து செய்க சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

15 Jul 2026, 1:43 am
ஆன்லைன் அபராதத்தை ரத்து செய்க  சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஆன்லைன் அபராதத்தை ரத்து செய்க சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, ஜூலை 14 – ஆன்லைன் அபராதம் விதிப்பதைக் கைவிட வலி யுறுத்தியும், எரிபொருள் விலை உயர்வைக் கண்டித் தும், சென்னை எழும்பூரில் சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் செவ்வா யன்று (ஜூலை 14) நடை பெற்றது.

முக்கிய கோரிக்கைகள் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும், பெட்ரோ லில் எத்தனால் கலப்பதைக் கைவிட வேண்டும், பிஎன்எஸ் சட்டத்தின் பிரிவு 106(1) & (2)-ஐ ரத்து செய்ய வேண்டும்.

மேலும், அரசுப் போக்குவரத்தைத் தனியார் மயமாக்கக் கூடாது, 13 ஆண்டுகளாக உயர்த்தப்ப டாத ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம், அரசு போக்கு வரத்து ஊழியர் சம்மேளனம் மற்றும் ஆட்டோ தொழிலா ளர் சம்மேளனம் ஆகியவை இணைந்து இந்தப் போரா ட்டத்தை முன்னெடுத்தன.

வி.குப்புசாமி வலியுறுத்தல் போராட்டத்தின் இடையே செய்தியா ளர்களிடம் பேசிய தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேள னத்தின் பொதுச்செயலாளர் வி.குப்புசாமி, “சாலை போக்குவரத்து தொழி லாளர்களின் கோரிக் கைகளை நிறைவேற்ற ஒன்றிய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்

. வாகனங்களு க்கு விதிக்கப்படும் ஆன் லைன் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும். விமான நிலையங்களில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது போல ஆட்டோக் களையும் அனுமதிக்க வேண்டும். கேரள அரசைப் போல, தமிழ்நாடு அரசும் ஆட்டோக்களுக்கென பிரத் யேக செயலியை உரு வாக்க வேண்டும்” என்று வலி யுறுத்தினார்.

பங்கேற்ற தலைவர்கள் சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன மாநிலத் தலைவர் பா.பால கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்தில், போக்குவரத்து ஊழி யர் சம்மேளன துணைப் பொதுச்செயலாளர் வி.தயா னந்தம், துணைச் செயலா ளர் ஏ.ஆர்.பாலாஜி, ஆட்டோ தொழிலாளர் சம்மேளன மாநில செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம், பொருளாளர் இ.உமாபதி, துணைச் செயலாளர் வி. ஜெயகோபால் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், அரசாங்க போக்குவரத்து ஓய்வு பெற்றோர் சம்மேளன மாநிலச் செயலாளர் எம்.சந்திரன், சிஐடியு தென் சென்னை மாவட்டச் செய லாளர் ஜி.செந்தில் குமார் மற்றும் மாவட்டச் செய லாளர்கள் எம்.உதய குமார் (மத்திய சென்னை), ராயப்பன் (வடசென்னை), ஏ.எல்.கண்ணன் (தென் சென்னை) உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.