முந்தய பக்கம்

சென்னையில் குறையாத இரவு நேர வெப்பம்

16 May 2026, 10:06 pm
சென்னையில் குறையாத இரவு நேர வெப்பம்
<p><strong>சென்னையில் குறையாத இரவு நேர வெப்பம்</strong></p><p>சென்னை, மே 16- சென்னையில் கோடைகாலம் இல்லாத சாதாரண மாதங்களிலும் கூட இரவு நேரங்களில் வீடுகளுக்குள் வெப்பத்தின் தாக்கம் குறையாமல் இருப்பது புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. &#39;கிளைமேட் ட்ரெண்ட்ஸ்&#39; அமைப்பு நடத்திய &quot;இந்தியாவின் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் வீடுகளில் இரவு நேர வெப்ப அழுத்தம்&quot; என்ற புதிய ஆய்வில், நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களின் வீடுகளுக்குள் இரவு நேர வெப்பநிலை தொடர்ந்து 32&#176;C-க்கு அதிகமாகவே இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. குறிப்பாக, அக்டோபர் 2025 முதல் ஏப்ரல் 2026 வரை 50 வீடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், சில வீடுகள் தொடர்ந்து 8 மாதங்கள் வரை இத்தகைய கடு மையான வெப்பச் சூழலை எதிர்கொண்டதும், இரவு நேரங்களில் வெப்பநிலை 31&#176;C-க்குக் கீழ் குறைவதே இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. வீடுகளில் பயன்படுத்தப்படும் கான்கிரீட் கூரைகள் மற்றும் சுவர்கள் பகலில் உறிஞ்சும் வெப்பத்தை இரவு 8 முதல் 9 மணிக்குள் வெளி யில் உமிழத் தொடங்குவதால், வீட்டிற்குள் வெப்பநிலை 34.7&#176;C வரை உயர்கிறது. அத்துடன் காற்றில் ஈரப்பதம் 75%-க்கும் அதிகமாக இருப்ப தால் புழுக்கம் நீடிக்கிறது. ஓரளவு வசதி படைத்தவர்கள் ஏசி போன்ற வசதி களைப் பயன்படுத்தும் வேளையில், ஏழை மக்கள் வெறும் மின்விசிறிக ளை மட்டுமே நம்பியிருக்க வேண்டி யுள்ளது. எனவே, நகர்ப்புற வெப்பத் தடுப்புத் திட்டங்களில் பகல் நேர வெப்பத்தை மட்டும் கணக்கில் கொள்ளாமல், இரவு நேர வீட்டு உட்புற வெப்பத்தைக் குறைக்க &#39;கூலிங் ரூஃப்&#39; மற்றும் காற்றோட்டமான கட்டி டப் பொருட்களைப் பயன்படுத்து வதை அரசு கட்டாயமாக்க வேண்டும் என இந்த ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சி யாளர்கள் பரிந்துரைத் துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram