சென்னை விரைவு செய்திகள்
17 Jun 2026, 11:25 pm

மாணவர்களுக்கான திருக்குறள் பேச்சுப் போட்டி

சென்னை, ஜூன் 17- ஸ்ரீராம் இலக்கியக் கழகம், வரும் ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 30 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே திருக் குறள் பேச்சு, ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகளை நடத்த இருக்கிறது. இப்போட்டிகள், 12 மையங்களில் நடத்தப்படும். சென்னை யில், ஆகஸ்ட் 29 அன்று அண்ணா நகரில் உள்ள சி.எஸ்.ஐ. ஜெஸ்ஸி மோசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், ஆகஸ்ட் 30 அன்று பல்லாவரத்திலுள்ள வேல்ஸ் வித்யாஷ்ரத் திலும் நடைபெறுகிறது. சென்னை தவிர, ஜூலை 18 சேலத்தி லும், ஜூலை 19 வேலூரிலும், ஜூலை 25 திருவாரூரிலும், ஜூலை 26 புதுச்சேரியிலும், ஆகஸ்ட் 1 ஈரோட்டிலும், ஆகஸ்ட் 2 கோவையிலும், ஆகஸ்ட் 8 தஞ்சாவூரிலும், ஆகஸ்ட் 9 திருச்சியிலும், ஆகஸ்ட் 22 மதுரையிலும், ஆகஸ்ட் 23 நெல்லையிலும் நடைபெறவுள்ளது. இடைநிலை (6 - 8 ஆம் வகுப்புகள்), மேல்நிலை (9 - 12 ஆம் வகுப்புகள்), கல்லூரி என மூன்று பிரிவுகளாக இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் பங்கு பெற விரும்புவோர் இதற்கான விண்ணப்பப் படிவத்தினை அருகிலுள்ள ஸ்ரீராம் சிட்ஸ் கிளைகளில் பெற்றுக் கொள்ளலாம். அல்லது www.shriramchits.com என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

உஜ்ஜீவன் சிறு நிதி வங்கியின் வட்டி

விகிதம் 7.13 விழுக்காடு உயர்வு சென்னை,ஜூன் 17- உஜ்ஜீவன் வங்கி தற்போது 3 முதல் 5 ஆண்டுகள் வரை யிலான அமெரிக்க டாலர் எஃப்சிஎன்ஆர்(பி) டெபாசிட்க ளுக்கு ஆண்டுக்கு 7.13% வரை வட்டி வழங்குகிறது. மேம்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு அதிகரிக்கும் அதே வேளை யில், வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் அதிக லாபம் தரும் முதலீட்டு வாய்ப்புகளும் கிடைக்கும் என்று வங்கியின் சில்லறை வர்த்த்தக பிரிவின் தலைவர் ஹிதேந்திர ஜா கூறியுள்ளார். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் உலகளாவிய சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்கான சிறந்த இடமாக இந்தியா தொடர்ந்து விளங்கும் என்றும் அவர் தெரிவித்தார். வைப்புத் தொகை மூலமாக அதிக அந்நிய செலாவணி வருவதை ஊக்குவிக்க, இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் உரிய நட வடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மீஞ்சூர் அரசு மருத்துவ அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க சிஐடியு வலியுறுத்தல்

திருவள்ளூர், ஜூன் 17- மக்களைத் தேடி மருத்துவம் திட்டப் பணி யாளர்களைத் தன்னிச்சையாகப் பணி செய்ய விடாமல் தடுக்கும் மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் சக்திவேல் மீது மாவட்ட நிர்வாகம் கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தொழிற்சங்க மையம் வலியுறுத்தி யுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இத்திட்டத் தின் கீழ் 303 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்குத் தினசரி 2 மணி நேரப் பணிக்கு மாத ஊதியமாக ரூ.4,500 வழங்கப்படுகிறது. இவர்களை ஆரம்ப சுகாதார நிலையப் பணி களுக்குப் பயன்படுத்தக் கூடாது எனப் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை இயக்குநர் மருத்துவர் சோமசுந்தரம் கடந்த 01.04.2026 அன்று சுற்றறிக்கை அனுப்பி யுள்ளார். இருப்பினும், இந்த உத்தரவை மீறி மீஞ்சூர் வட்டார மருத்துவ அலுவலர் சக்தி வேல், தனது உதவியாளர்கள் மூலம் ஊழி யர்களை ஆரம்ப சுகாதார நிலையப் பணிக்கு வருமாறு மிரட்டி வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஜி.சந்தானம் கூறு கையில், மாவட்ட ஆட்சியரும், சுகாதாரத் துறையும் சட்டவிரோதமாகச் செயல்படும் மருத்துவ அலுவலர் மீது உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தவறி னால் மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி ஐடிஐ இலவச சேர்க்கை

சென்னை, ஜூன் 17- பெருநகர சென்னை மாநகராட்சி தொழிற் பயிற்சி நிலையத்தில் 2026-27ஆம் கல்வியா ண்டிற்கான ஒன்றிய அரசின் என்சிவிடி சான்றி தழுடன் கூடிய இலவச சேர்க்கை தொடங்கப் பட்டுள்ளது. தகுதியுடைய 14 முதல் 40 வயது வரையிலான (பெண்களுக்கு வயது வரம்பு இல்லை) மாணவ, மாணவியர் ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம். இங்கு கணினி, பிளம்பர், ஃபிட்டர், மோட்டார் மெக்கானிக், எலக்ட்ரீஷியன், எல க்ட்ரானிக் மெக்கானிக் ஆகிய 6 பிரிவுகளில் மொத்தம் 184 இடங்கள் உள்ளன. 8 மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தகுதிக்கு ஏற்ப சேரலாம். மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கும் ஊழியர் பிள்ளைகளுக் கும் முன்னுரிமை வழங்கப்படும். இங்கு பயில்பவர்களுக்கு வளாக நேர்காணல் மூலம் 100% வேலைவாய்ப்பு, பயிற்சியின் போது ரூ.10,500 முதல் ரூ.15,000 வரை உதவித்தொகையுடன் கூடிய இன்டர்ன்ஷிப், மாதந்தோறும் ரூ.750 கல்வி உதவித்தொகை மற்றும் தகுதியானோருக்கு அரசு திட்டங்களின் கீழ் மாதம் ரூ.1,000 வழங்கப்படும். மேலும் சீருடை, பஸ் பாஸ், மதிய உணவு, சைக்கிள் உள்ளிட்ட நலத்திட் டங்களும் முற்றிலும் இலவசம். விருப்பமுள்ளவர்கள் www.chennai corporation.gov.in இணையதளத்தில் அல்லது ராயப்பேட்டையில் உள்ள மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தில் இலவசமாக விண்ணப்பம் பெற்று, அசல் சான்றிதழ்களுடன் ஜூன் 30-க்குள் நேரடி யாகச் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங் களுக்கு 044–28473117, 7010457571 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

‘ஏஐ - டிஜிட்டல் மார்க்கெட்டிங்’ பயிற்சி

சென்னை, ஜூன் 17- தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், சென்னை ஈக்காட்டுத்தாங்க லில் உள்ள அதன் வளாகத்தில் ஜூன் 23 முதல் 25 வரை “செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத் தலின் அடிப்படைகள்” குறித்த 3 நாள் முழுநேர பயிற்சி நடை பெறுகிறது. இப்பயிற்சியில் சாட்ஜிபி போன்ற ஏஐ தொழில்நுட் பங்கள், வாடிக்கையாளர் நடத்தை, எஸ்சிஓ மற்றும் Jasper, Canva AI, SEMrush, Sprinklr போன்ற நவீன ஏஐ கரு விகளைப் பயன்படுத்தும் முறைகள் குறித்து நேரடிப் பயிற்சி அளிக்கப்படும். 10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அடிப்படைக் கணினி அறிவுள்ள, 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் மற்றும் திருநங்கைகள் இதில் பங்கேற்கலாம். பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். வெளியூரினருக்குக் குறைந்த கட்டணத்தில் தங்குமிடம் உண்டு. விருப்பமுள்ளவர்கள் www.editn.in இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். விவரங்களுக்கு 9840114680, 9360221280 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

தமிழ்நாடு அரசின் 3 நாள் ‘கைபேசி பழுது நீக்கம்’ பயிற்சி

சென்னை, ஜூன் 17- தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், சென்னை ஈக்காட்டுத் தாங்கலில் உள்ள அதன் வளாகத்தில் ஜூன் 23 முதல் 25 வரை “கைபேசி பழுது நீக்கம் மற்றும் பராமரிப்பு” குறித்த 3 நாள் முழுநேர பயிற்சி நடைபெறுகிறது. இப்பயிற்சியில் கைபேசி வன்பொருள், நுண் சில்லு நிலை பராமரிப்பு, திரை மாற்றுதல், பழுதுகளைக் கண்டறிதல், செயலிழந்த கைபேசிகளைச் சரி செய்தல் மற்றும் மென் பொருள் பூட்டுகளை அன்லாக் செய்தல் போன்ற நடை முறை நுட்பங்கள் கற்றுத்தரப்படும். மேலும், அரசு நிதியுதவி மற்றும் மானியங்கள் குறித்தும் விளக்கப்படும். 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தொழிற்பயிற்சி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள், சுயதொழில் ஆர்வலர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட அனை வரும் இதில் பங்கேற்கலாம். பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். வெளியூரைச்சேர்ந்தவருக்கு குறைந்த கட்டணத்தில் தங்கும் விடுதி வசதி உண்டு. விருப்பமுள்ளவர்கள் www.editn.in இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். விவரங்களுக்கு 8668100181, 9360221280 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி போதைப்பொருள் பறிமுதல்

சென்னை, ஜூன் 17- சென்னை விமான நிலைய சரக்கு அட்ட வணை பகுதியில் கேட்பாரற்று கிடந்த ரூ.5 கோடி மதிப்பிலான ‘மெத்தபெட்டமைன்’ என்ற போதைப்பொருளை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ரசாயனப் பொடி என்ற பெயரில் இந்த போதைப்பொருளை மலேசியாவுக்குக் கடத்த முயன்றது முதற்கட்ட விசாரணை யில் தெரியவந்துள்ளது. இந்த பார்சலை விமான நிலையத்திற்குள் கொண்டு வந்தது யார் என்பது குறித்து, அங்குள்ள கண் காணிப்பு கேமரா காட்சிகளின் உதவியுடன் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வரு கின்றனர்.