தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

5 Jun 2026, 4:01 am
சென்னை விரைவு செய்திகள்

டெண்டர்களில் வெளிப்படைத்தன்மை தேவை ககன்தீப் சிங் பேடி உத்தரவு

சென்னை, ஜூன் 4- சென்னை மெட்ரோ வாட்டர் (குடிநீர் வாரியம்) மேற்கொள்ளும் அனைத்து டெண்டர் நடைமுறைகளிலும் முழுமையான வெளிப்படைத்தன்மையைப் பேண வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், குடிநீர் வாரியத்தின் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளின் முன்னேற்றம் குறித்து அவர் ஆய்வு செய்தார். அப்போது, நகரின் அனைத்துப் பகுதி களுக்கும், குறிப்பாகக் கடைக்கோடிப் பகுதிகள் மற்றும் இதுவரை குடிநீர் இணைப்பு வழங்கப்படாத தெருக்க ளுக்கும் குடிநீர் விநியோகம் சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளராக க.தர்ப்பகராஜ்

சென்னை, ஜூன் 4- இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான க.தர்ப்பகராஜ், கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளராக (நுகர்வோர் பணிகள்) புதனன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். பொதுமக்களுக்கான நுகர்வோர் சேவைகளை மேம்படுத்துதல் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் செயல்பாடு களை முறைப்படுத்துதல் ஆகிய முக்கியப் பணிகளை அவர் இனி கவனிப்பார். புதிய பொறுப்பேற்றுள்ள அவ ருக்குப் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளும் கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகளும் தங்களது வாழ்த்துகளைத் தெரி வித்து வருகின்றனர்.

திருப்பத்தூரில் ஜூன் 9 முதல் ஜூன் 17 வரை ஜமாபந்தி

திருப்பத்தூர், ஜூன் 4- திருப்பத்தூர் மாவட்டத்தில் 1435-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) வரும் ஜூன் 9-ஆம் தேதி முதல் ஜூன் 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் தெரிவித்துள்ளார். இந்த வருவாய்த் தீர்வாய நாட்களில் பொதுமக்கள் தங்களின் பல்வேறு துறை சார்ந்த கோரிக்கை மனுக்களைச் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் நேரடியாக ஜமாபந்தி அலுவலர்களிடம் வழங்கிப் பயன்பெறலாம்.

பெட்ரோலிய டீலர்கள் சங்கம் போராட்ட அறிவிப்பு

சென்னை, ஜூன் 4- தூத்துக்குடி கீழஅரசரடியில் உள்ள ஐஓசிஎல் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது ஆயுதமேந்திய கும்பல் நடத்திய கொடூரத் தாக்குதலைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகப் பெட்ரோலிய டீலர்கள் சங்கம் புதன்கிழமை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாகச் சங்கத்தின் தலைவர் கே.பி. முரளி, தமிழகத் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி-க்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், குற்றவாளிகள் மீது ‘குண்டாஸ்’ சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும், போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் மற்றும் பெட்ரோலிய ஊழியர்களின் பாதுகாப்பிற்குத் தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், 7,000 டீலர்கள் மற்றும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுடன் வேலைநிறுத்தம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் மூளை வாதம், மாரடைப்பு: மூதாட்டிக்கு அரிய சிகிச்சை!

சென்னை, ஜூன் 4- சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேர் மலர் மருத்துவ மனையில், ஒரே நேரத்தில் மூளை வாதம் மற்றும் மார டைப்பால் பாதிக்கப்பட்ட 76 வயது மூதாட்டிக்கு அதி நவீன முறையில் ஒரே அமர்வில் சிகிச்சை அளித்து மறு வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் 0.009% மட்டுமே ஏற்படும் இந்த மிக அபூர்வமான பாதிப்பை, டாக்டர் கார்த்திகேயன் எஸ். மற்றும் டாக்டர் மனோகர் ஜி.தலைமையிலான பன்முக மருத்துவக் குழுவினர் வெற்றிகரமாகக் கையாண்டுள்ளனர். மூளை மற்றும் கழுத்துப் பகுதியில் இருந்த கடுமையான அடைப்புகள், இருதய இரத்த ஓட்டப் பாதிப்பு ஆகியவற்றைச் சீரமைக்க ‘இன்ட்ராக்ரானியல் ஸ்டென்டிங்’ மற்றும் ‘ஆஞ்சியோபிளாஸ்டி’ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. லோக்கல் அனஸ்தீசியா மூலம், மிகச் சிறிய துளையிடும் நவீன தொழில்நுட்ப முறையில் வெறும் 45 நிமிடங்களில் இச்சிகிச்சைகள் அனைத்தும் வெற்றிகர மாகச் செய்து முடிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

60 சவரன் நகை திருடிய பெண் கைது

சென்னை, ஜூன் 4- சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த காபி தூள் தொழில திபர் சுப்பிரமணியம் என்பவரது வீட்டில் 60 சவரன் தங்க நகைகள் காணாமல் போனது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. கே.கே.நகர் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அவரது வீட்டுப் பணிப்பெண் கலா (48) நகைகளைத் திருடியதை ஒப்புக்கொண்டார். இதை யடுத்து, அவரிடமிருந்து 60 சவரன் நகைகளையும் முழுமை யாக மீட்டெடுத்த போலீசார், அதைக் கைதான கலாவிட மிருந்து பறிமுதல் செய்து உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.