சென்னை விரைவு செய்திகள்
1 hour before

தாம்பரம் விஷ்ணு நகரில்

ரூ.91 லட்சத்தில் புதிய மூங்கில் பூங்கா: மாநகராட்சி டெண்டர் சென்னை, ஆக. 5 –தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு 53 விஷ்ணு நகர் பகுதியில் ரூ.91 லட்சம் மதிப்பீட்டில் புதிய மூங்கில் பூங்கா அமைப்பதற்கான டெண்டரை மாநகராட்சி நிர்வாகம் கோரியுள்ளது. இதன் மூலம் இப்பகுதி மக்களுக்கு விரைவில் புதிய பசுமை வெளி கிடைக்கவுள்ளது.

நகரின் பசுமைப் பரப்பை அதிகரிப்பதோடு, மக்களுக்கு ஒரு பொழுதுபோக்கு இடமாகவும் இப்பூங்கா விளங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மூங்கில் பூங்காவானது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் எனவும், நடைபயிற்சி, உடற்பயிற்சி மற்றும் ஓய்வெடுக்க ஒரு அமைதியான சூழலை வழங்கும் எனவும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

டெண்டர் அறிவிப்பின்படி, காம்பவுண்ட் சுவர் அமைத்தல், கர்ப் சுவர்களுடன் கூடிய நடைபாதைகள், கழிவறை தொகுதி, வடிகால் வசதிகள், பம்ப் அறை மற்றும் நீர் தொட்டி உள்ளிட்ட கட்டமைப்புகள் இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட உள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆக.8-ல் குடும்ப அட்டை குறைதீர் முகாம்

திருவள்ளூர், ஆக 5-திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் குடும்ப அட்டை குறைதீர் முகாம் வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ச.கவிதா தெரிவித்துள்ளார்.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், திருத்தங்கள் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் போன்ற சேவைகளுக்காக இந்த முகாம் நடத்தப்படுகிறது. பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் சென்று இந்தச் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உள்ள முன்னுரிமை மற்றும் அந்த்யோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைதாரர்கள் அனை வரும் தங்களது விரல்ரேகையைப் பதிவு செய்வது கட்டாய மாக்கப்பட்டுள்ளதால், இதுவரை பதிவு செய்யாதவர்கள் தங்களுக்கு அருகிலுள்ள நியாயவிலைக் கடைகளில் அதனைப் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

பெண் செய்தி வாசிப்பாளர் புகாரில் தொழிலதிபர் மீது வழக்குப்பதிவு

சென்னை, ஆக.5- தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளருக்குப் பாலியல் தொல்லை கொடுத்து, அடைத்து வைத்து மிரட்டல் விடுத்ததாகத் சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும் பங்குச்சந்தை யூடியூபருமான பி.ஆர். சுந்தர் மீது ஐஸ் ஹவுஸ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வேலை கேட்டுத் தன்னை அணுகிய பெண்ணைப் பட்டினப்பாக்கத்திலுள்ள தனது வீட்டிலும், பின்னர் அலுவலகத்திற்கும் வரவழைத்துத் தவறாக நடந்து கொண்டதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பாலியல் தொல்லை மற்றும் மிரட்டல் உள்ளிட்ட பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.