தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

27 May 2026, 12:37 am
சென்னை விரைவு செய்திகள்

பக்ரீத், தொடர் விடுமுறை 4,195 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சென்னை,மே 26- பக்ரீத் பண்டிகை, முகூர்த்த தினங்கள் மற்றும் தொடர் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, பயணிக ளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்க மே 26 முதல் மே 31-ஆம் தேதி வரை மொத்தம் 4,195 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இதன்படி, சென்னையின் கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரம் ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு மே 26 முதல் மே 30 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதேபோல், விடுமுறை முடிந்து பொதுமக்கள் மீண்டும் சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக ஞாயிற்றுக்கிழமை (மே 31) மட்டும் 1,085 சிறப்பு பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

புழல் குழாய் உடைப்பு சீரமைப்பு: குடிநீர் விநியோகம் தொடக்கம்!

சென்னை, மே 26- புழல் பகுதியில் சென்னை குடிநீர் வாரியத்தின் பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பு போர்க்கால அடிப்படை யில் சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கொளத்தூர், அம்பத்தூர் மற்றும் அண்ணா நகர் பகுதிகளில் 6 நாட்க ளுக்குப் பின் குடிநீர் விநியோகம் மீண்டும் தொடங்கப்பட்டது. மே 19 அன்று 1,200 மி.மீ விட்டம் கொண்ட பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பால் 35-க்கும் மேற்பட்ட பகுதி களில் குடிநீர் தடைப்பட்டிருந்தது. தற்போது ஜி.என்.டி சாலையில் 25 அடி நீள புதிய குழாய் மாற்றியமைக்கப் பட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் குடிநீர் விநி யோகம் படிப்படியாகச் சீராகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரத்தில் விபத்துகள்: இரு பெண்கள் பலி!

காஞ்சிபுரம்,மே 26- காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற இரு வேறு சாலை விபத்துகளில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். முதல் விபத்தில், சாலாபோகம் பகுதியைச் சேர்ந்த அகிலா (68) என்ற முதியவர், சுற்றுலா வேனின் படிக்கட்டு அருகே அமர்ந்து பயணித்தபோது, வாகனம் திரும்பியதில் நிலைதடுமாறி கீழே விழுந்து தலைக்காயத்தால் உயிரிழந்தார். இதுகுறித்து பாலுசெட்டி சத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இரண்டாவது விபத்தில், ஓரிக்கை பகுதியைச் சேர்ந்த கண்மணி (30) என்பவர் கணவருடன் இருசக்கர வாக னத்தில் வீடு திரும்பியபோது, காஞ்சிபுரம் - வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் தனியார் தொழிற்சாலை பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். காயம் அடைந்த அவரது கணவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வாலாஜாபாத் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.