சென்னை விரைவு செய்திகள்
26 May 2026, 12:44 am

பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா? ஆலோசித்து முடிவு அமைச்சர் ராஜ்மோகன்

சென்னை, மே 25- தமிழகத்தில் வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளி கள் திறப்பு தேதியை தள்ளிப்போடுவது குறித்து முதல்வர் சி.ஜோசப் விஜய்யுடன் ஆலோசித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். ஜூன் முதல் வாரத்தில் நிலவக்கூடிய வெப்ப அலை குறித்து வானிலை ஆய்வு மையத்திடம் கருத்து கேட்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அதன் அடிப்படையில் ஜூன் 1-ம் தேதிக்கு பதில் ஜூன் 8-ம் தேதி பள்ளிகளைத் திறக்கக் கோரும் கோரிக்கை கள் பரிசீலிக்கப்படும் என்றார். மேலும், 1-3 வகுப்பு பாடப்புத்தகங்களில் குழந்தைகள் உதவி எண்கள் அச்சிடப்பட்டுள்ளதாகவும், ஆசிரியர்களின் நீண்டகாலக் கோரிக்கைகளைத் தீர்க்க சிறப்புக் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். இதில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட்டவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கிய பின் அவர் இதனைத் தெரிவித்தார்.

காலிபாட்டில் திரும்பபெறும் திட்டம் நிறுத்தி வைப்பு

சென்னை, மே 25 - டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டத்தை யடுத்து காலிபாட்டில்களை திரும்பபெறும் திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மண்டலம் மற்றும் சில மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலிபாட்டில் சேகரிப்பு பணியை ஏப்.25 முதல் தொடங்க நிர்வாகம் திட்டமிட்டு இருந்தது. அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் போராட்ட நடவடிக்கைக்குழு சார்பில், தனி முகமை மூலம் காலி பாட்டில்களை சேகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தது. அதனை நிர்வாகம் நிறை வேற்றாமல் இருந்தது. இதயைடுத்து ஊழியர்கள டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு, எழும்பூரில் உள்ள மேலாண்மை இயக்குநர் அலுவலகம் அருகே குவிந்தனர். இதனையடுத்து நிர்வாகிகளை அழைத்து மேலாண்மை இயக்குநர் பேசினர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக்குழு நிர்வாகிகள், “சென்னை மண்டலம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் காலிபாட்டில் சேகரிப்பு நிறுத்தி வைக்கப்படும். பணம் வசூலிக்கும் கருவியில் காலிபாட்டிலுக்கு ரூ.10 வசூலிக்கம் வசதி நீக்கப்படும். இந்த திட்டத்தை செயல்படுத்த நீதிமன்றத்தில் கால அவகாசம் கேட்கப்படும் என்று மேலாண்மை இயக்குநர் உறுதிய ளித்துள்ளார். இதனையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது” என்றனர். இந்தப் போராட்டத்தால் டாஸ்மாக் கடைகள் சுமார் ஒரு மணி நேரம் அடைக்கப்பட்டிருந்தது.

பழவேற்காட்டில் கடல் ஆமைகள் பாதுகாப்பு பேரணி

பொன்னேரி, மே 25- பழவேற்காடு கடற்பகுதியில் கடல் ஆமைகளின் இறப்பைத் தடுக்கவும், அவற்றைப் பாதுகாக்கவும் வனத்துறை மற்றும் பறவைகள் சரணாலயத் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் ஆமைகள் வலைகளில் சிக்கி இறப்பதைத் தவிர்க்கும் வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. இப்பேரணியில் தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக மாணவ-மாணவியர் மற்றும் சமூக ஆர்வலர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

வாட்டர் ஹீட்டர் வெடித்து இளம்பெண் உயிரிழப்பு

திருத்தணி, மே 25- திருத்தணி அருகே குளியலறையில் வாட்டர் ஹீட்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் உமா மகேஸ்வரி (22) என்ற இளம்பெண் உயிரிழந்தார். குமாரகுப்பம் பகுதியைச் சேர்ந்த இவர், சனிக்கிழமை காலை குளிப்பதற்காக ஹீட்டரைப் பயன்படுத்தியபோது மின் கசிவு ஏற்பட்டு பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதில் அருகிலிருந்த மண்ணெண்ணெய் கேன் தீப்பற்றிய தில் உடல் கருகிய அவர், திருவள்ளூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். மகளின் சாவில் மர்மம் இருப்பதாக தந்தை பழனி புகார் அளித்துள்ள நிலையில், போலீார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருமணமாகி இரண்டே ஆண்டுகளே ஆவதால், இச்சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆக்கிரமிப்புகளால் பயணிகள் தவிப்பு

சென்னை, மே 25- சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் காந்தி-இர்வின் சாலை நுழைவாயிலில் நிலவும் ஆக்கிரமிப்புகள் மற்றும் முறையற்ற வாகன நிறுத்தங்களால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நடைபாதைகளை உணவகங்கள் ஆக்கிரமித்துள்ள தாலும், சாலையில் தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தப்படு வதாலும் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் போக்கு வரத்து முற்றிலும் முடங்குகிறது. ரயில் நிலைய மறு சீரமைப்பு பணிக்காக வைக்கப்பட்டுள்ள தடுப்புகளால் பயணிகளை ஏற்றி, இறக்குவதில் சிக்கல் நீடிக்கிறது. முறையற்ற வாகன நிறுத்தமே நெரிசலுக்கு முக்கிய காரணம் எனக் கூறும் ரயில்வே அதிகாரிகள், அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்தைப் பயன்படுத்த அறிவுறுத்தி யுள்ளனர். இருப்பினும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து நெரிசலைக் குறைக்க வேண்டும் என்பதே பயணி களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சென்னை கரியப்பா மேல்நிலைப் பள்ளியில் புதிய வசதிகள்

சென்னை, மே 25- சென்னையின் பழமையான கல்வி நிறுவனங்களில் ஒன்றான வடபழனி கில்ட் ஆஃப் சர்வீஸ் ஜெனரல் கரியப்பா மேல்நிலைப் பள்ளியில், சனிக்கிழமை அன்று அதிநவீன வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் 200 பேர் அமரக்கூடிய உணவுக்கூடம் ஆகியவை திறந்து வைக்கப்பட்டன. மறுசீரமைக்கப்பட்ட இந்த வளாகம், ஏழை எளிய மாணவர்களுக்குத் தொழிற்கல்வி வழங்கும் நோக்கில் 1956-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாகும். தற்போது 1,000 மாணவர்கள் பயிலும் வகையில் 45,350 சதுர அடி பரப்பளவில் மேம்படுத்தப்பட்டுள்ள இப்பள்ளி யில், கூடைப்பந்து, கைப்பந்து, கபடி உள்ளிட்ட விளை யாட்டுகளுக்கான தரப்படுத்தப்பட்ட விளையாட்டு மைதானங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்திய ராணுவத்தின் முதல் ஜெனரலான ஃபீல்டு மார்ஷல் காரியப்பாவின் மகனும், ஓய்வுபெற்ற ஏர் மார்ஷலுமான கே.சி.கரியப்பா மற்றும் அவரது மனைவி மீனா காரியப்பா ஆகியோர் புதிய கட்டிடங்களைத் திறந்து வைத்தனர்.

மேம்பாலத்திலிருந்து கார் கவிழ்ந்து விபத்து

சென்னை, மே 25- குன்றத்தூர் அருகே வெளிவட்டச் சாலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் உயிரிழந்தார்; அவருடன் பயணித்த ஆசிரியை மற்றும் 4 சிறுவர்கள் படுகாயமடைந்தனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியைச் சேர்ந்த ஆசி ரியர் பிரபாகர் (44), தனது சக ஆசிரியை சசிகலா மற்றும் நான்கு சிறுவர்களுடன் வண்டலூர் உயிரி யல் பூங்காவிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். ஞாயிற்றுக்கிழமை காலை குன்றத்தூர் மேம்பாலத்தில் கார் சென்றபோது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரை மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் தலையில் பலத்த காய மடைந்த பிரபாகர் சம்பவ இடத்திலேயே உயி ரிழந்தார். படுகாயமடைந்த சசிகலா மற்றும் நான்கு சிறுவர்கள் மீட்கப்பட்டு குரோம்பேட்டை மற்றும் எழும்பூர் அரசு மருத்துவ மனைகளில் தீவிர சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து குரோம் பேட்டை போக்கு வரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.

வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் நகைகள் கொள்ளை

சென்னை, மே 25- சென்னை பெரம்பூரில் திமுக நிர்வாகி வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பூர் துளசிங்கம் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (56). இவரது கணவர் இறந்துவிட்டார். திமுக கட்சியில் நிர்வாகியாக இருக்கும் ராஜேஸ்வரிக்கு பாலகுமார் என்ற மகனும், பிரகதி என்ற மகளும் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் பாலகுமார், ராஜேஸ்வரி வீட்டின் அருகே மற்றொரு வீட்டில் வசிக்கிறார். ராஜேஸ்வரி, தனது மகள் பிரகதியுடன் கடந்த மாதம் 30ஆம் தேதி ஓசூரில் உள்ள தனது சகோதரர் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில் ராஜேஸ்வரி வீட்டின் கதவு பூட்டு ஞாயிற்றுக்கிழமை உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டினர், ராஜேஸ்வரிக்கும், அருகே வசிக்கும் அவர் மகன் பாலகுமாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த பாலகுமார், அங்கு விரைந்து சென்று பார்த்தார். அப்போது பீரோவை உடைத்து அதில் இருந்த 35 சவரன் நகை, ரூ.30 ஆயிரம் திருடப்பட்டி ருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து செம்பியம் காவல் தெ வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்று மின் விநியோகம் நிறுத்தம்

சென்னை, மே 25- சென்னையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரண மாக செவ்வாயன்று (மே 26) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஒரு சில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் அறி வித்துள்ளது. அதன்படி தி.நகர், தசரதபுரம் மற்றும் சாலிகிராமத்தில் ஆற்காடு சாலை, காவேரி ரங்கன் நகர், குமரன் காலனி, காந்தி நகர் ஆகிய இடங்க ளிலும், கே.கே.நகர், விருகம்பாக்கம் மற்றும் சின்மயா நகர் பகுதிகளில் 80 அடி சாலை, பரணி காலனி, பாஸ்போர்ட் அலு வலகம், ஷாமலா டவர், காம ராஜர் சாலை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளி லும் மின்தடை செய்யப் படும்.