தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

31 May 2026, 11:30 pm
சென்னை விரைவு செய்திகள்

காலமானார்

சென்னை, மே 31- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவொற்றியூர் வடக்கு பகுதி அன்னை சிவகாமி நகர் கட்சி கிளை உறுப்பி னர் தோழர் மனோகர் (72) உடல்நலக் குறைவு காரணமாக சனிக்கிழமையன்று (மே 30) காலமானார். அவரது உடலுக்கு மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல், நிர்வாகிகள் வெங்க டையா, சுரேஷ்பாபு, கே.கே.புஷ்பா, முகவை பெருமாள், ஆர்.நல்லப்பன் உள்ளிட்ட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் ஞாயிறன்று (மே 31) எர்ணாவூ ரில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

பெண்ணின் உடலிலிருந்த 2.8 கிலோ மண்ணீரல் அகற்றம்! சென்னை,மே 31- பீகாரைச் சேர்ந்த 23 வயது இளம் இல்லத்தரசி ஒருவர், கடுமையான உடல் சோர்வு காரணமாகச் சென்னை எஸ்.ஆர்.எம் பிரைம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்ததில், கல்லீரல் ரத்த நாளச் சுருக்கம் மற்றும் மண்ணீரல் வீக்கத்தால் ரத்த அணுக்கள் அழியும் அரிய பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவரது ரத்த அணுக்களின் எண்ணிக்கை ஆபத்தான அளவுக்குக் குறைந்திருந்தது. இதையடுத்து, மூத்த ஆலோசகர் டாக்டர் ஆர்.வி.சுகி சுப்பிரமணியம் தலைமையிலான மருத்துவக் குழுவினர், ‘லேப்ராஸ்கோப்பி’ துளை அறுவை சிகிச்சை மூலம் அவரது உடலிலிருந்து 2.8 கிலோ எடையுள்ள பிரமாண்ட மண்ணீரலை வெற்றிகரமாக அகற்றினர். பாதிக்கப்பட்ட ரத்த நாளங்கள் மற்றும் மாறியிருந்த உடல் அமைப்பால் இந்த அறுவை சிகிச்சை மிகவும் சவா லாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பி னும், நவீன லேப்ராஸ்கோப்பி முறையால் பெரிய அளவி லான காயங்களின்றிப் பெண் விரைவாகக் குணமடைந்து, சிகிச்சைக்குப் பின் 5 நாட்களில் வீடு திரும்பினார்.

நிழற்குடை இல்லாத மயிலாப்பூர் பேருந்து நிறுத்தம் : பயணிகள் அவதி! சென்னை,மே 31- மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை சந்திப்பில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிகப் பேருந்து நிறுத்தம் பழுதடைந்து, மிகக் குறுகலாக உள்ளதால் பயணிகள் கொளுத்தும் வெயிலில் காத்து நிற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. பிராட்வே, தாம்பரம், வடபழனி உள்ளிட்ட முக்கிய இடங்களை இணைக்கும் இந்த நிறுத்தத்தில், போதிய நிழல் மற்றும் இருக்கை வசதிகளுடன் நிரந்தர நிழற்குடை அமைக்க வேண்டும் எனப் பயணிகள் வலியுறுத்துகின்றனர்.எதிர்ப்புறம் உள்ள நிறுத்தத்தின் நடைபாதைகளும் உடைந்து மோசமாக உள்ளதாகப் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

திருவள்ளூரில் 6 விரைவு ரயில்கள் தற்காலிகமாக நின்று செல்ல அனுமதி!

சென்னை,மே31- அரக்கோணம் சந்திப்பில் ரூ.97.73 கோடி மதிப்பிலான தடம் சீரமைப்பு மற்றும் சிக்னல் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவ தால், ஜூன் 1 முதல் ஜூன் 20 வரை பிருந்தா வன், மங்களூரு, ஹூப்ளி, லோக்மான்ய திலக் மற்றும் காச்சிகுடா செல்லும் இரு ரயில்கள் உள்ளிட்ட 6 முக்கிய விரைவு ரயில்கள் திருவள்ளூர் நிலையத்தில் தற்காலி கமாக நின்று செல்லும் எனத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் மற்றும் விரைவு ரயில்களுக்கான பாதைகளைத் தனித்தனியாகப் பிரிக்கும் இப்பணியால், ரயில்களின் காத்திருப்பு நேரம் குறைவதோடு பயண நேரமும் 7 நிமிடங்கள் வரை மிச்சமாகும். மேலும், அரக்கோணத்தில் உள்ள 3 நடைமேடைகள் 24 பெட்டிகளைக் கையாளும் வகையில் நீட்டிக்கப்பட உள்ளன. இப்பணிகள் காரணமாகச் சென்னை - அரக்கோணம் வழித்தடத்தில் சில ரயில் சேவைகள் ரத்து அல்லது மாற்றம் செய்யப்படலாம் என்பதால், தற்காலிக மாகத் திருவள்ளூர் - அரக்கோணம் இடையே பேருந்து வசதிகளை அதிகரிக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள் ளனர்.

தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு!

சென்னை,மே 31- கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரி யர் பணியிடங்களைப் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் 4 நாட்களுக்குள் தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்குக் கல்வித்துறை கெடு விதித்துள்ளது. பள்ளி கள் திறக்கும் நாளில் முழு ஆசிரியர் பலம் இருப்பதை உறுதி செய்யுமாறு மாவட்டக் கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஆண்டாண்டு காலமாக நடக்கும் இந்த வழக்கமான நடைமுறைக்குத் தனியாகப் புதிய உத்தரவாதம் தேவையில்லை என்றும், கடந்த ஆண்டு பணியாற்றிய தற்காலிக ஆசிரி யர்களே தொடரலாம் என்றும் சென்னை முதன்மைக் கல்வி அதிகாரி எம். கபீர் தெரி வித்துள்ளார். இருப்பினும், பள்ளிகள் திறக்க சில நாட்களே உள்ள நிலையில் இவ்வளவு தாமத மாக உத்தரவு வந்திருப்பது பணிச்சுமையை ஏற்படுத்தியுள்ளதாகத் தலைமை ஆசிரியர் கள் கவலை தெரிவித்துள்ளனர். தற்காலிக ஆசிரியர்களுக்கான ஊதிய பட்ஜெட் ஒதுக்கீட்டை அரசு முறையாக உறுதி செய்ய வேண்டும் என்றும், வாட்ஸ்அப் தகவல்களை நம்பி நியமித்தால் கடந்த காலங்களைப் போல ஆசிரியர்கள் ஊதியத்தை இழக்க நேரிடும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டு கின்றனர். இதற்கிடையே, தற்காலிக நிய மனங்களைத் தவிர்த்து, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருப்பவர்களை அரசே நேரடியாக நியமித்தால் கல்வியின் தரம் உய ரும் எனப் பலரும் கோரிக்கை விடுத்துள் ளனர்.

வளைகுடா நாடுகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்வது குறைந்துள்ளது விரைவில் சீரடையும் என சுற்றுலா நிறுவனம் கருத்து

சென்னை,மே 31- மேற்காசிய பதற்றம் காரணமாக துபாய், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்வது குறைந்துள் ளதாக சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை யில் உள்ள முன்னணி நிறுவனமான எல்ஜிடி குளோபல் ஹாஸ்பிடாலிட்டி லிமிடெட் நிர்வாக இயக்குனர் வில்பிரட் செல்வராஜ் தெரிவித்துள்ளார். இந்த நிலைமை தற்காலிகமானதுதான் என்றும் விரைவில் சீரடையும் என்றும் சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார். நுகர்வோரின் அதிகரித்து வரும் தேவை, அனுபவப் பூர்வமான பய ணங்களுக்கான விருப்பம் மற்றும் நிறுவனங் களின் பயணத் தேவைகள் ஆகியவற்றின் காரணமாகப் பயணம், விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத் துறைகள் தொடர்ந்து நல்ல வளர்ச்சியை நோக்கிப் பயணிப்பதாக அவர் கூறினார். இந்தியாவிலும், துபாய் மற்றும் மலேசியா உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேசச் சந்தைகளிலும் தங்களது நிறுவனம் தடம் பதித்து வருவதாகவும் அவர் கூறினார். அதே வேளையில், வாடிக்கை யாளர்களுக்கான சிறந்த அனுபவம், வலு வான செயல்பாட்டுத் திறன் மற்றும் பயணம், விருந்தோம்பல் துறையில் நீண்ட கால அளவிடக்கூடிய வளர்ச்சி வாய்ப்புகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.