தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

25 May 2026, 2:25 am
சென்னை விரைவு செய்திகள்

சென்னையில் குற்றப்பின்னணி கொண்ட 15 பேர் கைது

சென்னை, மே 24- சென்னையில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட சோத னையில் 410 ரவுடிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, 4 தொடர் குற்றவாளிகள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர். பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு அச்சுறுத் தலாக விளங்கும் வழிப்பறி, வன்முறைச் சம்பவங் களைத் தடுப்பதற்காக மாநக ரம் முழுவதும் இந்தச் சிறப்புச் சோதனை நடத்தப் பட்டது. இதில் கொடுங்கை யூர், எம்.கே.பி நகர் மற்றும் புதுவண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் தலை மறைவாக இருந்த முக்கிய ரவுடிகள் கைது செய்யப் பட்டனர். இதேபோல், போதைப்பொருளுக்கு எதிராக 86 இடங்களில் நடத்தப்பட்ட மற்றொரு சோதனையில், 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்களி டமிருந்து 1.2 கிலோ கஞ்சா மற்றும் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடையில் திருட்டு: வாலிபர் கைது

திருப்பத்தூர், மே 24- வாலாட்டியூர் பகுதியில் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடையின் விற்பனை யாளரான சாலா (46),சனிக் கிழமையன்று இரவு வழக்கம்போல் கடையைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த திருமலை மற்றும் அவரது மைத்துனர் ராஜேஷ் (21) ஆகிய இருவரும் மது போதையில் கடையின் பூட்டை உடைத்து, உள்ளே இருந்த இரண்டு மூட்டை அரிசி, ஒரு மூட்டை கோதுமை மற்றும் இரண்டு பெட்டி பாமாயில் ஆகிய வற்றைத் திருடிச் சென்றுள்ள னர். காவல் துறையினர் விசாரணை நடத்தி விக்னேஷ் என்பவரின் மகன் ராஜேஷைக் கைது செய்த னர்.

பூட்டிக்கிடக்கும் சென்னை மாநகராட்சி உடற்பயிற்சிக் கூடம் திறக்கப்படுமா?

சென்னை, மே 24- மயிலாப்பூர் ரோசரி சர்ச் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சியின் இலவச உடற்பயிற்சிக் கூடம் கடந்த ஆறு மாதங்க ளாகப் பூட்டிக்கிடப்பதால், அப்பகுதி மக்கள் உடற்பயிற்சி செய்ய வழியின்றி அவதிக்குள் ளாகியுள்ளனர். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப் பட்ட இக்கட்டிடம் தற்போது பராமரிப் பின்றிப் பாழடைந்து கிடப்பதால், சமூக விரோதச் செயல்கள் நடக்க வாய்ப்புள் ளதாக உள்ளூர்வாசிகள் அச்சம் தெரிவிக்கின் றனர். கட்டிடம் மிகவும் பழுதடைந்துள் ளதால், அதை இடித்துவிட்டுப் புதிய உடற்பயிற்சிக் கூடம் கட்டத் திட்டமிடப்பட்டு ள்ளதாகவும், தேர்தல் நடத்தை விதிகளால் தாமதமான இப்பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். அவசி யமான இந்த மறுசீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

திருப்பத்தூர் அருகே சாராயம் கடத்தல்: மூதாட்டி உட்பட 4 பேர் கைது

திருப்பத்தூர், மே 24- திருப்பத்தூர் அடுத்த ராச்சமங்கலம் பகுதியில், வீட்டிற்கு எண்ணெய் வாங்கிச் செல்வது போல பிளாஸ்டிக் பையில் 20 லிட்டர் சாராயத்தைக் கடத்தி வந்த மூதாட்டி உட்பட 4 பேரை கிராமிய காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர். போலீசாரின் வாகன சோதனையின்போது பிடிபட்ட சாந்தி (42), அவரது மகன் விக்னேஷ் (23) ஆகியோரிடம் நடத்திய விசாரணையில், ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் இருந்து இந்தச் சாராயத்தை வாங்கியது தெரியவந்தது. இதனை ராச்ச மங்கலம் பகுதியில் உள்ள சாந்தியின் தாயாரான ராஜா மணி (65) என்பவரிடம் விற்பனைக்காகக் கொண்டு சென்ற போது அவர்கள் பிடிபட்டனர். இதையடுத்து சாந்தி, விக்னேஷ், ராஜாமணி, கிருஷ்ணமூர்த்தி ஆகிய நால்வர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையிலடைத்தனர்.

மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளரின் தந்தை காலமானார்

ராணிப்பேட்டை, மே 24 – தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் ராணிப் பேட்டை மாவட்ட செயலாளர் எம். குமார் தந்தை ஆர். முனுசாமி (90) அவர்கள் சனிக்கிழமை (மே 23) கால மானார்.அவருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். ஆற்காடு வட்டம், புங்கானூர் மதுரா பகுதியில் உள்ள வெள்ளைகுளம் கிராமத்தில் வைக்கப்பட்டி ருந்த மறைந்த முனுசாமியின் உடலுக்கு, சிபிஎம் ராணிப்பேட்டை மாவட்டச்செயலாளர் பி. ரகுபதி மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினார். சிபிஎம் மூத்த தோழர் எல்.சி. மணி, ஆற்காடு தாலுகா செயலாளர் ஜி. மதியழகன், மாவட்ட குழு உறுப்பினர் சி. ராதாகிருஷ்ணன் மற்றும் தாலுகா குழு உறுப்பினர்கள் முரளி, சம்பத் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

கியூஆர் கோடு மூலம் மக்கள் குறைகளைக் கேட்கும் எம்.எல்.ஏ

சென்னை, மே 24- பல்லாவரம் தொகுதி மக்களின் குறைகளை விரைந்து தீர்க்கும் நோக்கில், தமிழ்நாடு வெற்றிக் கழக எம்.எல்.ஏ காமாட்சி ‘கியூஆர் கோடு’ மூலம் ஆன்லைனில் புகார் அளிக்கும் புதிய வசதியை அறிமுகப்படுத் தியுள்ளார். இதன் மூலம் மக்கள் அலுவலகத்திற்கு நேரில் வராம லேயே தங்களின் செல்பேசி வழியாகப் புகார் அளிக்க முடியும். இத்திட்டம் தொடங்கிய இரு நாட்களிலேயே சாலை சேதம், குப்பை அகற்றுதல் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட அடிப்படை வசதிகள் குறித்த புகார்கள் வந்துள்ளதாகவும், சிறிய புகார்களுக்கு உடனடியும், பெரிய பிரச்சினைகளுக்கு 10 முதல் 15 நாட்களுக்குள்ளும் தீர்வு காணப்பட்டு வருவ தாகவும் அவர் தெரிவித்தார். புதிய ஆட்சியில் மக்களின் தேவைகளை அறிந்து, தாம்பரம் மாநகராட்சி அதிகாரி களின் ஒத்துழைப்போடு பருவமழைக்கு முன்பாக அனைத்து வடிகால் மற்றும் சாலைப் பணிகள் முடிக்கப்படும் என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.