தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

22 Jun 2026, 11:41 pm
சென்னை விரைவு செய்திகள்

திருவண்ணாமலை: நெல் சாகுபடிக்கு மானியம் ஆட்சியர் அறிவிப்பு

திருவண்ணாமலை, ஜூன் 22- திருவண்ணாமலை மாவட்டத்தில் சொர்ணவாரி பருவத்தில் 38,900 எக்டர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தின் கீழ், இயந்திரம் மூலம் நெல் நடவு அல்லது நேரடி நெல் விதைப்பு செய்யும் விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு ரூ.4,000 வீதம் அதிகபட்சமாக இரண்டு ஏக்கர் வரை மானியம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் இணைய விரும்பும் 18 வயது பூர்த்தி அடைந்த விவசாயிகள், அக்ரிஸ்நெட் வலைதளம் அல்லது உழவர் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் [ஆதார் அட்டை நகல்], நடவு ரசீது, வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் அடங்கல் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், உயிர் உரங்கள் மற்றும் நெல் நுண்ணூட்டக் கலவை 50 சதவீத மானியத்திலும், நெல் விதைகள் ரகங்களுக்கு ஏற்ப கிலோவிற்கு ரூ.10 முதல் ரூ.20 வரையிலும் மானியம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் தெரிவித்துள்ளார்.

நடராஜர் கோவில் தரிசன விழா: மக்களுக்கு மோர் வழங்கிய சிறுபான்மை மக்கள்

சிதம்பரம், ஜூன் 22- சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தரிசன விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிதம்பரம் சுற்று வட்டார பகுதிகள் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கோயிலுக்கு வருகை தந்தனர். இவர்களுக்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல குழு சார்பில் நீர்மோர் மற்றும் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி சிதம்பரம் வடக்கு மெயின் ரோட்டில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறு பான்மை மக்கள் நலக்குழுவின் மாநில துணைத்தலை வர் மூசா தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சபீர் முக மது ஜாகிர் உசேன், அஷ்ரப் அலி, முகமதுஹலிம் உள்ளிட்ட வர்கள் கலந்து கொண்டு பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் குடிநீர் வழங்கினர்.

சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 22 குரோம்பேட்டையை அடுத்த திருநீர்மலை பகுதியில், நிலத்தடி நீர் பாது காப்பை வலியுறுத்தி சீமைக் கருவேல மரங்களை அகற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடங்கி வைத்தார். இயந்திரங்கள் மூலம் மரங்களை அப்புறப்படுத்திய அவர், நிலத்தடி நீரை உறிஞ்சி நிலத்தை வறட்சியாக்கும் இந்த 'பிசாசு மரங்களை' தமிழகத்தில் முற்றிலு மாக அகற்ற வேண்டியது அவசியம் என்றார். செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "தமிழகத்தில் 12 மாவட்டங்களில் சீமைக் கருவேல மரங்களை வேரோடு பிடுங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். இதில் ராமநாதபுரம் மாவட்டம்தான் இந்த மரங்களால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். மேலும், மதிமுக தேர்தல் அரசியலுக்காக மட்டும் இயங்கும் கட்சியல்ல என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்கள் மற்றும் முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பு எனத் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளதை நினைவுகூர்ந்தார். சமீபத்திய அம்மோனியா வாயு கசிவு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த வைகோ, இவ்விவகாரத்தில் அரசு உரிய 'உண்மை அறியும் குழு' அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். உலக மழைக்காடுகள் நாளில், பிறந்தநாள் காணும் முதலமைச்சர் விஜய்க்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடலில் மூழ்கி சிறுவன் பலி

சென்னை, ஜூன் 22- சென்னை மடிப்பாக்கம் அருகே உள்ள புழுதிவாக்கத்தைச் சேர்ந்தவர் இஷாந்த்குமார் (17). இவர், தனது நண்பர்களுட ன் ஞாயிற்றுக்கிழமை திருவான்மியூர் கடற்கரைக்கு வந்தார். அங்கு இஷாந்த்குமாரும், அவரது நண்பர்களும் கடலில் குளித்தனர். அப்போது அங்கு பெரிய அலையில் சிக்கி இஷாந்த்குமார், கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், இஷாந்த்குமாரை மீட்க முயன்றனர். ஆனால் சிறிது நேரத்தில் இஷாந்த்குமார், தண்ணீரில் மூழ்கி காணாமல்போனார். உடனே அவர்கள், திருவான்மியூர் காவல் நிலையாத்திற்கும், தீயணைப்பு நிலையாத்திற்கும தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து அங்கு வந்த காவல் துறையினரும், தீயணைப்பு படையினரும் இஷாந்த்குமாரை தேடினர். இந்நிலையில் சிறிது நேரத்தில் இஷாந்த்குமார் சடலம், திருவான்மியூர் குப்பம் பகுதியில் கரை ஒதுங்கியது. உடனே காவல் துறையினர அங்கு சென்று, இஷாந்த்குமார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுற்றுச்சூழல் இயக்கம்

சென்னை, ஜூன் 22 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ஆக்சிஸ் வங்கி தனது ‘ஓப்பன் ஃபார் தி பிளானெட்’ திட்டத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் நிலைத்தன்மை இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 8,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை ஒன்றிணைத்து, தூய்மையான மற்றும் பசுமையான எதிர்காலத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். இப்பயணத்தில் மரம் நடுதல், கடற்கரை மற்றும் பூங்காக்களைச் சுத்தம் செய்யும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்தல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மனிதச் சங்கிலிகள் மற்றும் மறுசுழற்சி முறைகளை வலுப்படுத்துதல் போன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடு கள் முன்னெடுக்கப்படுவதாக சமூகம், வாடிக்கையாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றி, ஆக்சிஸ் வங்கி நிலைத்தன்மைக்கு வித்திடுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.