தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

24 Jun 2026, 1:16 am
சென்னை விரைவு செய்திகள்

பெண்கள் பாதுகாப்பு, கனிமவள கடத்தல் தடுப்புக்கு முக்கியத்துவம்: எஸ்பி உறுதி

கிருஷ்ணகிரி, ஜூன் 23- கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 20-ஆவது காவல் கண்காணிப்பாளராக ஜி.எஸ்.அனிதா செவ்வாயன்று பொறுப்பேற்றுக்கொண்டார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “பள்ளி மாணவிகள், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மலைக் கிராமங்களில் குழந்தை திருமணங்களைத் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அண்டை மாநிலங்களுக்குக் கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க எல்லைச் சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். மேலும், கட்டப்பஞ்சாயத்து, அனுமதியின்றி பதாகைகள் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, நிலுவையில் உள்ள பழைய வழக்குகளை முடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்படும்” என்று தெரிவித்தார்.

பைக் விபத்து: நெல்லை வாலிபர் கீழே விழுந்து பலி

சென்னை, ஜூன் 23- சென்னை மணலி அருகே எண்ணூர் விரைவுச்சாலை யில் உள்ள கத்திவாக்கம் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் தடுப்புச்சுவரில் மோதிய விபத்தில், பாலத்திலிருந்து கீழே விழுந்து திருநெல்வேலியைச் சேர்ந்த 23 வயது வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் படுகாயமடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலியைச் சேர்ந்த மோகனசுந்தர் (23) மற்றும் சென்னை கொரட்டூரைச் சேர்ந்த அவரது நண்பர் ஸ்ரீஹரன் (24) ஆகிய இருவரும் டிப்ளமோ முடித்து விட்டு, எண்ணூரில் உள்ள ஒரு தனியார் கனரக வாகன உற்பத்தி நிறுவனத்தில் பயிற்சிப் பணிக்கான நேர்காணலில் (இன்டர்வியூ) பங்கேற்கச் சென்றுள்ளனர். நேர்காணல் முடிந்து அவர்கள் பைக் மூலம் கத்திவாக்கம் மேம்பாலத்தைக் கடந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த பைக் அங்குள்ள மையத் தடுப்புச்சுவரில் பலமாக மோதியது. இந்த மோதலின் தாக்கத்தால் மோகனசுந்தர் பாலத்தி லிருந்து கீழே தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தனை: 2,825 வழக்குகள் பதிவு

சென்னை, ஜூன் 23- சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்தவும், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும் கடந்த ஜூன் 19 முதல் ஜூன் 21 ஆம் தேதி வரை போக்குவரத்து காவல்துறை நடத்திய சிறப்பு சோதனையில் 2,825 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தச் சோதனையின் போது, மதுபோதையில் வாகனங்களை இயக்கியதாக 443 வழக்குகளும், அதிவேகம் மற்றும் அஜாக்கிரதையாக வாகனங்களை ஓட்டியதாக 110 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. மேலும், தலைக்கவசம் (ஹெல்மெட்) அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டிச் சென்ற வாகன ஓட்டிகள் மீது அதிகபட்சமாக 2,272 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் தடுப்பு வேட்டையில் 38 வழக்குகள் பதிவு

சென்னை, ஜூன் 23- சென்னையில் கடந்த ஜூன் 14 முதல் ஜூன் 20 ஆம் தேதி வரை காவல்துறை நடத்திய அதிரடி போதைப்பொருள் தடுப்பு வேட்டையில், 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருட்களை வைத்திருத்தல், கடத்துதல், சேமித்தல் மற்றும் விற்பனை செய்பவர்களுக்கு எதிராக, அமைக்கப்பட்ட தனிப்படைகள் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையை மேற்கொண்டன. இவ்வேட்டையின் போது போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள், போதைப்பொருள் கடத்துபவர்கள் மற்றும் செயற்கை போதைப்பொருள் சப்ளையர்களைத் தீவிரமாகக் கண்காணித்து, அதுகுறித்த தகவல்களை உள்ளூர் காவல் நிலையங்களுக்கு வழங்கி குற்றவாளிகளைப் பிடிக்க உதவினர். இந்த ஒரு வார கால சோதனையில் 22 கிலோ கஞ்சா, 831 கிராம் மெத்தம்பேட்டமைன் , 6 மில்லிகிராம் அபின், 2 மில்லிகிராம் கொகைன் மற்றும் 1,222 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம் ஈட்டப்பட்ட ரூ.1.04 லட்சம் ரொக்கப் பணம், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 4 இருசக்கர வாகனங்கள், ஒரு ஆட்டோ, ஒரு கார் மற்றும் 5 செல்போன்கள் ஆகியவையும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கோவில் உண்டியலை உடைத்து திருட்டு

சென்னை, ஜூன் 23- சென்னை புழல் -அம்பத்தூர் சாலை எம்.ஏ.சி நகரில் உள்ள பவானி முத்துமாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து, அதிலிருந்த சுமார் 5,000 ரூபாய் காணிக்கைப் பணத்தைத் திருடிய 2 வாலிபர்களை புழல் போலீசார் கைது செய்துள்ளனர். வெள்ளிக் கிழமை காலை கோவில் திறக்கப்பட்ட போது சில்லறை நாணயங்கள் சிதறிக்கிடந்ததை அடுத்து, பூசாரி சாந்தி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார், திருட்டில் ஈடுபட்ட வியாசர் பாடியைச் சேர்ந்த பிர சாந்த் (24) மற்றும் கொடுங்கை யூரைச் சேர்ந்த கிஷோர் (22) ஆகியோரைக் கைது செய்தனர். இவர்களில் பிரசாந்த் மீது ஏற்கனவே 9 குற்ற வழக்குகளும், கிஷோர் மீது ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. கைதான இருவரிட மிருந்தும் திருட்டிற்குப் பயன்படுத்திய ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது: ஜூலை 31-க்குள் விண்ணப்பம்

சென்னை, ஜூன் 23- சாதிப் பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைப்பிடிக்கும் 10 ஊராட்சிகளுக்கு தலா 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய "சமூக நல்லிணக்க ஊராட்சி விருது" வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 2026-27 ஆம் ஆண்டிற்கான விருது பெற விரும்பும் ஊராட்சிகள், விண்ணப்பப் படிவத்தை உரிய ஆவணங்களுடன் இணைத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 31.07.2026-க்குள் சமர்ப்பிக்குமாறு ஆதிதிராவிடர் நல இயக்குநரகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை https://cms.tn.gov.in/cms_migrated/document/forms/social_award_app_26_27.pdf என்ற இணையதளத்திலோ அல்லது மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலோ பெற்றுக்கொள்ளலாம்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.