தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

12 Jun 2026, 10:40 pm
சென்னை விரைவு செய்திகள்

மின் விநியோகம் சீரமைப்பு: பெண்கள் போராட்டம் ஒத்திவைப்பு

திருவள்ளூர், ஜூன் 12- பொன்னேரி அடுத்த ஆரணி பேரூராட்சியில் மின் விநியோகம் சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அறிவித்திருந்த தீப்பந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆரணி பகுதியில் தொடர் மின்தடையால் பொதுமக்கள் மற்றும் கைத்தறி நெசவுத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால், கடந்த ஜூன் 2 அன்று மாதர் சங்கத்தினர் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். எனினும் மின்தடை தொடர்ந்ததால், பொதுமக்கள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, ஜூன் 11 அன்று மாதர் சங்கம் சார்பில் தீப்பந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மின்வாரிய பொறியாளர்கள் ஜூன் 10 அன்று இப்பகுதியில் இருந்த 250 கேவி மின்சாரத்தை 310 கேவியாக மாற்றி மின் விநியோகத்தை சீரமைத்தனர். கோரிக்கையை ஏற்ற மின்வாரியத்திற்கு நன்றி தெரிவித்துள்ள மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.பத்மா மற்றும் பொன்னேரி பகுதி பொருளாளர் நாகலட்சுமி ஆகியோர், தங்களின் போராட்டம் தற்காலிகமாக

ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். வேலூரில் ஜூன் 17 முதல் ஜமாபந்தி: ஆட்சியர் தகவல்

வேலூர், ஜூன் 12- வேலூர் மாவட்டத்திலுள்ள 6 தாலுகா அலுவலகங்களிலும் ஜூன் 17ஆம் தேதி முதல் ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) நடைபெற உள்ளது. அணைக்கட்டு தாலுகாவில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலும், குடியாத்தத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலும், காட்பாடியில் வேலூர் கோட்டாட்சியர் தலைமையிலும் ஜமாபந்தி நடைபெறும். இதேபோல் கே.வி.குப்பத்தில் குடியாத்தம் கோட்டாட்சியர், வேலூரில் துணை ஆட்சியர் (நிலம்), பேரணாம்பட்டில் மாவட்ட ஆய்வு குழு அலுவலர் ஆகியோர் தலைமையில் ஜூன் 18 முதல் 24 வரை அந்தந்த தாலுகாக்களுக்கு ஏற்ப ஜமாபந்தி நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட உள்வட்ட கிராம மக்களிடமிருந்து பட்டா மாறுதல், ஓய்வூதியம், அரசின் உரிமைத் தொகை உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள் நேரடியாகப் பெறப்பட்டு, கிராமக் கணக்குகள் தணிக்கை செய்யப்படும். தகுதியான மனுக்கள் மீது இறுதி நாளில் தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரேபிடோ பைக் ஓட்டுநர் பாலியல் தொல்லை

சென்னை, ஜூன் 12- சென்னையில் ரேபிடோ பைக்கில் பயணித்த மேகாலயாவைச் சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்து, தாக்கிய பைக் ஓட்டுநரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். கொடுங்கையூரில் தங்கியுள்ள அந்தப் பெண், வியாழக்கிழமை இரவு சென்ட்ரல் பகுதியிலிருந்து தனது வீட்டிற்குச் செல்ல ரேபிடோ பைக்கைப் பதிவு செய்துள்ளார். பாரதி நகர் மேம்பாலம் அருகே சென்றபோது, பைக் ஓட்டுநர் அவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பெண் சத்தமிடவே, அவரை வண்டியிலிருந்து இறக்கித் தாக்கிவிட்டு ஓட்டுநர் தப்பியோடினார். இதுகுறித்த புகாரின்பேரில், கொடுங்கையூர் போலீசார் பைக் எண் மற்றும் மொபைல் எண்களை வைத்து குற்றவாளியைத் தேடி வருகின்றனர்.

போலீஸ் காவலில் இருந்து கைதிகள் தப்பியோட்டம்

சென்னை, ஜூன் 12- சென்னையில் ஒரே வாரத்தில் போலீஸ் காவலில் இருந்து கைதிகள் தப்பியோடிய 3 சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது தப்பியோடிய கஞ்சா வழக்கு கைதி மோகன்ராஜ் (34) என்பவரை, தனிப்படை போலீசார் வியாழக்கிழமை பெங்களூருவில் வைத்து மீண்டும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதேபோல், போதை மாத்திரை விற்பனை தொடர் பாக கே.கே. நகர் காவல் நிலை யத்தில் விசாரணை கைதியாக இருந்த திவாகர் (21) என்பவர் கடந்த செவ்வாய்க்கிழமை தப்பியோடினார்; அவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். முன்னதாக, ஜூன் 2-ஆம் தேதி நீலாங்கரை போலீஸ் காவலில் இருந்து தப்பிய கொள்ளை வழக்கு கைதி விஷால் (19) என்பவரை போலீசார் விரட்டிப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

18 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை, ஜூன் 12- ஆவடி மாநகரக் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாகக் கஞ்சா கடத்தி வந்த 3 பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து 18 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்துள்ளனர். திருமுல்லைவாயில் மீனாட்சி நகர் பகுதியில் அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்தின் பேரில் அம்பத்தூரைச் சேர்ந்த அருண்குமார் என்பவரைப் பிடித்துச் சோதனையிட்டனர். அதில், அவர் ஒடிசா மாநிலத்திலிருந்து விற்பனைக்காகக் கடத்தி வந்திருந்த 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் பாரிவாக்கம் சிக்னல் அருகே நடத்திய கண்காணிப்பில், சுஜித் மற்றும் ராய் ஜாய் ஆகிய இருவரைப் பிடித்துச் சோதித்தபோது, தலா 5 கிலோ வீதம் மொத்தம் 10 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களும் ஒடிசாவிலிருந்து கஞ்சாவைக் கடத்தி வந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி

வருகின்றனர். தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 உயர்வு

சென்னை, ஜூன் 12- சென்னையில் தங்கம் வெள்ளியன்று விலை கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,800-க்கும், சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,10,400-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.265-க்கும், ஒரு கிலோ ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை துறைமுகத்தில் ரூ.400 கோடியில் ஏற்றுமதி கார் நிறுத்துமிடம்

சென்னை, ஜூன் 12- சென்னையில் அதிகரித்து வரும் கார் ஏற்றுமதித் தேவையைப் பூர்த்தி செய்ய, சென்னை துறைமுக வளாகத்திற்குள் ரூ.400 கோடி செலவில் புதிய அடுக்குமாடி கார் நிறுத்துமிடம் அமைக்கப்படவுள்ளது. சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்களில் இருந்து ஒவ்வொரு 80 வினாடிக்கும் ஒரு கார் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 2025-26 நிதியாண்டில் மட்டும் சென்னை துறைமுகம் 2,04,165 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. தற்போது துறைமுகத்தின் பல்வேறு இடங்களில் மொத்தம் 59,675 சதுர மீட்டர் பரப்பளவில் சுமார் 4,500 கார்களை மட்டுமே நிறுத்த முடியும். ஆனால், தேவையைச் சமாளிக்க 8,000 கார்களை நிறுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இடப்பற்றாக்குறையால், செங்குத்தாக இந்த அடுக்குமாடி நிறுத்துமிடம் அமைக்கப்பட உள்ளது. செயல்முறை: இந்தத் திட்டத்திற்காக விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க ஆலோசகர்களை நியமிக்க சென்னை துறைமுக ஆணையம் விண்ணப்பங்களை கோரியுள்ளது. விரிவான அறிக்கை தயாரிக்க மேலும் மூன்று மாதங்களும் தேவைப்படும். இதன்பின், மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்ற பிறகு டெண்டர் கோரப்படும். ஹூண்டாய் மற்றும் கியா போன்ற முன்னணி நிறுவனங்களின் வாகனங்கள் ஏற்றுமதிக்கு இந்தத் திட்டம் பெரும் உதவியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாடி-திருநின்றவூர் சி.டி.எச் சாலையை அகலப்படுத்த முதலமைச்சருக்குப் பொதுமக்கள் கோரிக்கை

சென்னை, ஜூன் 12- பாடி முதல் திருநின்றவூர் வரையிலான 22 கி.மீ நீள சென்னை - திருபதி சாலையை ஆறுகழிச் சாலையாக அகலப்படுத்த நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிடுமாறு அப்பகுதி மக்கள் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அம்பத்தூர், பாடி உள்ளிட்ட தொழிற்பேட்டைகளின் கனரக வாகனங்கள் உட்பட தினமும் 1.5 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் பயன்படுத்தும் இச்சாலை, கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் குறுகலான நான்கு வழிச்சாலையாகவே நீடிக்கிறது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, இந்தத் தூரத்தைக் கடக்க இரண்டு மணி நேரம் வரை ஆவதோடு, போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. மேலும், இச்சாலையில் ஆந்திர மாநிலத்திற்கு நேரடிப் பேருந்து வசதி இல்லை என்றும், ஆக்கிரமிப்புகள், முறையற்ற வாகன நிறுத்தங்கள் மற்றும் மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கடந்த 2013-ல் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா இச்சாலையை விரிவுபடுத்த நிலம் கையகப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்தும், உள்ளூர் வியாபாரிகளின் எதிர்ப்பு உள்ளிட்ட காரணங்களால் பணிகள் முடங்கின. தற்போது இச்சாலையை அகலப்படுத்தும் திட்டம் அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தீராத அடிப்படைப் பிரச்சனைகள் தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

சென்னை, ஜூன் 12- தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகியும் குடிநீர் தட்டுப்பாடு, ஆக்கிரமிப்புகள், தெருநாய் தொல்லை போன்ற அடிப்படைப் பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை என வியாழக்கிழமை நடந்த மன்றக் கூட்டத்தில் கட்சிப் பாகுபாடின்றி கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர். அதிகாரிகள் வார்டுகளுக்கு வருவதில்லை என்றும், வார்டு நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவதாகவும் அவர்கள் சாடினர். மாநகராட்சிக்குத் தேவையான 130 மில்லியன் லிட்டர் குடிநீரில் 90 மில்லி யன் லிட்டர் மட்டுமே கிடைப்பதாக அதி காரிகள் ஒப்புக்கொண்ட நிலையில், அடுத்த ஆண்டு பேரூர் திட்டத்தின் மூலம் கூடுதலாக 150 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறப்பட்டு தட்டுப்பாடு நீக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் எஸ். பாலச்சந்தர் தெரிவித்தார். மேலும், மகப்பேறு நிதியுதவி கிடைக்காத தகுதி வாய்ந்த பெண்களுக்கு உடனடியாக நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர மருத்துவ அலுவலர் பூபேஷ் உறுதியளித்தார்.

நிதி ஆயோக்கூட்டம் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி புறக்கணிப்பு!

புதுச்சேரி, ஜூன் 12- பிரதமர் தலைமையில் நடைபெற்ற நித்தி ஆயோக் கூட்டத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்கேற்காமல் புறக்கணித்தார். தில்லியில் பிரதமர் மோடி தலைமை யில் நிதி ஆயோக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து மாநிலங் கள்,யூனியன் பிரதேச முதல்வர்களுக்கும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்க பட்டு இருந்தது. புதுச்சேரியின் அண்டை மாநில மான தமிழகத்தின் முதல்வர் விஜய் இக்கூட்டத்தில் பங்கேற்றார்.அதேப்போல் அனைத்து மாநில முதல்வர்களும் கூட்டத் தில் பங்கேற்ற போதும்,புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மட்டும் பங்கேற்கவில்லை. முதல்வர் ரங்கசாமி பங்கேற்காதது குறித்து அவரது அலுவலகம் தரப்பில் கேட்டதற்கு, தில்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்துக்கு முதல் அமைச்சர் கலந்து கொள்ளவில்லை. புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியில் இருப்பதால் பிரதமர் நமது மாநில நலனை கருத்தில் கொண்டு முடிவு எடுப்பார்கள். நமது மாநிலம் தொடர்பான விரிவான நிதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என தெரி வித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.