தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

9 hours before
சென்னை விரைவு செய்திகள்

மரகதச் சிலை திருட்டு: அரியலூர் வாலிபர்கள் கைது, சிலை மீட்பு

சென்னை, செப்.14-செங்கல்பட்டு மாவட்டம் பெருங்கரணை நாடுபழனி முருகன் கோயிலில் மரகதச் சிலை திருடப்பட்ட வழக்கில்,இணையவழியில் திட்டம் தீட்டிய அரியலூரைச் சேர்ந்த ஜி.மணிகண்டன் (27), இ.இளவழகன் (26), டி.ஜெயபால் (20)ஆகிய மூன்று இளைஞர்களைச் சித்தாமுர் காவல்துறையினர் கைது செய்தனர்.இணையத்தில் மரகதச் சிலைகள் உள்ள கோயில்களைத் தேடித் தேர்ந்தெடுத்த இந்த மூன்று பேரும், கடந்தசெப்டம்பர் 1ஆம் தேதியன்று பெருங்கரணை பாலமுருகன் மரகத தண்டாயுதபாணி கோயிலில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அலாரங்களைச் செயல்இழக்கச் செய்து இரண்டரை அடி உயர மரகதச் சிலை மற்றும் வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்றனர். சித்தாமுூர் ஆய்வாளர் எஸ்.மகாலிங்கம் தலைமையிலானதனிப்படையினர் நூற்றுக்கும் மேற்பட்ட கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளைக் கண்டறிந்தனர்.பாழடைந்த குவாரியில் புதைக்கப்பட்டிருந்த மரகதச் சிலை மற்றும்வெள்ளிப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமையன்று மீட்கப்பட்டு மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்திரா நகர் அடகு கடையில் திருட முயன்ற சாஃப்ட்வேர் இன்ஜினியர் கைது

சென்னை, செப்.14-சென்னை இந்திரா நகரில் உள்ள நகை அடகு கடையில் பூட்டை உடைத்துத் திருட முயன்ற ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஸ்ரீராம் ஸ்ரீனு பாபு (25)என்பவரைப் பொதுமக்கள் உதவியுடன் பிடித்துக் காவல்துறையினர் கைது செய்தனர். பெருங்குடி ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் இவர், வெள்ளிக்கிழமை அதிகாலையில் மங்கள்சந்த்துக்குச் சொந்தமான அடகு கடையில் திருட முயன்றபோது கையும் களவுமாகப் பிடிபட்டார். அவரிடமிருந்து கைப்பேசி, கட்டிங் மெஷின், சுத்தியல், ட்ரில்லிங் மெஷின் மற்றும் ஸ்க்ரூடிரைவர் ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டு, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆன்லைன் வழக்கு பதிவை ரத்து செய்யக் கோரி ஆட்டோ சங்கப் பேரவை வலியுறுத்தல்

திருவள்ளூர், செப்.14-திருவள்ளூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் திருவள்ளூர் பகுதி பேரவைக் கூட்டம் நடைபெற்றது. பகுதி தலைவர் ஜி.சங்கர் தாஸ் தலைமை வகித்த இக்கூட்டத்தில், மாவட்ட தலைவர் ஏ.கரிமுல்லாதுவக்கி வைத்துப் பேசினார். டிஆர்இயூ டிவிஷன் செயலாளர் கே.சீனிவாசன் கொடியேற்றினார்.கூட்டத்தில் மாவட்ட செயலாளர் எம்.சந்திரசேகரன் நிறைவுரையாற்றினார்.

பகுதி தலைவராக ஜி.சங்கர்தாஸ், செயலாளராக எச்.கார்த்திக், பொருளாளராக பி.சரவணன் ஆகியோர் தேர்ந்த்தெடுக்கப்பட்டனர்.

ஆட்டோ தொழிலாளர்களுக்கு ஆந்திர அரசு வழங்குவது போல் ஆண்டுதோறும் ரூ.25,000 மானியம் வழங்க வேண்டும்எனவும், ஆன்லைன் மூலம் வழக்கு பதிவு செய்வதை உடனே கைவிட வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.

விவசாய கூலி வீட்டில்நகை, பணம்கொள்ளை

திருவண்ணாமலை, செப் 14-திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே விவசாய கூலி தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து, 14சவரன் நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.56 ஆயிரம்ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.சேத்துப்பட்டு அடுத்த தச்சாம்பாடி மதுரா பாண்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணப்பன் மனைவி சின்னக்குழந்தை. கணவர் இறந்த நிலையில், இவருக்கு 2 மகள்கள்,ஒரு மகன் உள்ளனர். சின்னக்குழந்தை விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.

சம்பவத்தன்று சின்னக்குழந்தை வீட்டை பூட்டிவிட்டு விவசாய கூலி வேலைக்கு சென்றார். பின்னர் மாலையில்வீட்டுக்கு திரும்பி வந்தபோது, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

அதிர்ச்சியடைந்த அவர், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, 2 பீரோக்களின் பூட்டுகளும் உடைக்கப்பட்டிருந்தன. அதில் வைத்திருந்த 14 சவரன் நகைகள் மற்றும் ரூ.56ஆயிரம்ரொக்கம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர், செப். 14-மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 7,598 கன அடியிலிருந்து 8,618 கன அடியாக அதிகரித்துள்ளது.

திங்களன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்குவினாடிக்கு 8,618 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்துகாவிரி டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 12,000 கனஅடி தண்ணீரும், கிழக்கு

மற்றும் மேற்கு கால்வாய்களில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 400 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்படுகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட, அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், மேட்டூர் அணையின்நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதன்படி, அணையின் நீர்மட்டம் 88.32

அடியிலிருந்து 88.21 அடியாகக் குறைந்துள்ளது. அணையில் தற்போது 50.63 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது.

பூங்காக்கள் மற்றும் சுவர்களை அழகுபடுத்தும் திட்டம் தொடக்கம்

சென்னை, செப்.14-பெருநகர சென்னை மாநகராட்சியும், சுற்றுச்சூழல் அறக்கட்டளையும் இணைந்து‘வால்.இ - ப்ளூபீன் சென்னை’ என்ற திட்டத்தின் கீழ் சென்னை நகரின் சுவர்களை வண்ணமயமானகலைக்கூடங்களாக மாற்றும் பணியைத் தொடங்கியுள்ளன.

கிரீன்வேஸ் சாலை, அடையாறு, ஆர்.ஏ.புரம் மற்றும் திரு.வி.க. பாலம் உள்ளிட்ட தெற்குப் பகுதி சுவர்களில் கருப்பு மான்கள்,நாரைகள், நீர்க்கோழிகள் மற்றும் உள்ளூர்பறவை இனங்களின் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. பொதுமக்களிடையே இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதைத் தடுத்துப் பொது இடங்களை அழகுபடுத்தவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக ஈஎப்ஐ அமைப்பைச் சேர்ந்த அருண் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். சோழிங்கநல்லூர், தாம்பரம், கீழக்கட்டளை, சேத்துப்பட்டு மற்றும் கோவலம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு அடுத்த ஒரு மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்படும் எனமாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன்தெரிவித்துள்ளார். உள்ளூர் கலைஞர்கள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் இத்தத்திட்டத்தின் மூலம் பொதுமக்களிடம் நமது பாரம்பரியம் மற்றும் இயற்கைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணம் செய்வதாகக் கூறி நகை பெற்ற காதலன்

அம்பத்தூர் செப். 14-அம்பத்தூர் சண்முகபுரத்தைச் சேர்ந்த பிரியங்கா (25), கள்ளிக்குப்பத்தில் தனியார்

கடையில் பணியாற்றினார். அப்போது சந்தோஷுடன் காதல் ஏற்பட்டது. திரு

மணம் செய்வதாகக் கூறிய சந்தோஷ், தொழில் நஷ்டத்தை சரிசெய்ய பணம் கேட்டுள்ளார். இதை நம்பிய பிரியங்கா, தங்கச் சங்கிலியை அடகு வைத்து ரூ.3 லட்சமும், பெற்றோருக்குத் தெரியாமல் 9

சவரன் நகைகளையும் அவரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.